பரமக்குடி சாத்தாயி அம்மன் கோயிலில் ஆவணி பால்குட விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஆக 2025 05:08
பரமக்குடி; பரமக்குடி சாத்தாயி அம்மன் கோயிலில் 33ம் ஆண்டு ஆவணி பால்குட திருவிழா நடக்கிறது. கோயிலில் ஆக.,8 காலை கணபதி ஹோமம், காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. அன்று மாலை சந்தன காப்பு அலங்காரத்தில் அம்மன் அலங்காரமாகி மகா தீபாராதனை நடந்தது. இதே போல் தினமும் மாலை மூலவர் மீனாட்சி, காமாட்சி, குமரி அம்மன், சரஸ்வதி, மகாலட்சுமி அலங்காரங்களில் அருள் பாலித்தார். இரவு 7:00 மணிக்கு சிவ பூஜை அலங்காரத்தில் மகாதீபாராதனை நடந்தது. நாளை ஆடி வெள்ளி மாலை திருவிளக்கு பூஜையும், ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அருள்பாலிக்க உள்ளார். நாளை வெள்ளி கவச அலங்காரமும் ஆக.,17 காலை 7:00 மணிக்கு வைகை ஆற்றில் இருந்து பால் குடங்கள் புறப்பட்டு, அம்மனுக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.