அவிநாசி; அவிநாசி அருகேயுள்ள நம்பியாம்பாளையம் ஊராட்சி, சுண்டக்காம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள முத்தரையர் சமுதாயப் பெருஞ்சாதி குல ஸ்ரீ கருப்பராயர் கோவிலில் ஆடி மாத பொங்கல் விழா கடந்த மாதம் 29ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து நாள்தோறும் அபிஷேகம், அலங்கார பூஜை படைக்கலம் புறப்பாடு ஆகியவை நடைபெற்றது. நேற்று முன்தினம் பிள்ளையார் கோவிலில் இருந்து அரச மரத்தடி அம்மனுக்கு முளைப்பாலிகை மற்றும் மாவிளக்கு எடுத்து நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக சென்றனர். பொங்கல் விழாவையொட்டி, ஸ்ரீ கருப்பராயர் கோவில் அறக்கட்டளை மற்றும் கோவில் கமிட்டி சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.