அமாவாசை சைவ படையல் பிரசாதம் நோய் தீர்க்கும் மருந்தாகும் அதிசயம்
பதிவு செய்த நாள்
15
ஆக 2025 03:08
கடல் பார்க்க, கதிரவன் பார்க்க, காளையாம் நந்தி பார்க்க கிழக்கு முகம் நோக்கி, சிம்ம வாகனத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ ஓம் சக்தி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், எண்ணுார் விரைவு சாலை, திருவொற்றியூர் (தீயணைப்பு நிலையம் அரு கில்), சென்னை – 600019 என்ற முகவரியில் இடம் பெற்றுள்ளது. கோவிலுக்குள் நுழைந்ததும் பிரதான தெய்வாக, ஸ்ரீ ஓம் சக்தி அங்காள பரமேஸ் வரி அம்மன் காட்சியளிக்கிறார். கோவில் வளாகத்தில் பாவாடைராயன், நர்த்தன கணபதி, அபிராமி தாயார், மகாலஷ்மி, சரஸ்வதி, துர்க்கை, கால பைரவர் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் வீற்றிருக்கின்றனர். குபேர மூலையில், குபேர கணபதி, வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். வேப்பமரத்தின் கீழ், நாகாத்தம்மனும், வில்வம் – நாகலிங்கம் மரத்தடியில் மஹா முனீஸ்வரரும் எழுந்தருளியுள்ளனர். பிரதி மாதம் அமாவாசை தினத்தன்று, சிறப்பு அபிஷேகம், பூஜைகள் அம்மனுக்கு நடக்கும். அன்றைய தினம் நெய்வேத்தியமாகும் சைவ படையல், பக்தர்களின் பிணி தீர்க்கும் அருமருந்து பிரசாதமாக வழங்கப்படுவது இக்கோவிலின் தனிசிறப்பு. இரவில், உற்சவ தாயார் ஊஞ்சல் சேவை நடக்கும். பவுர்ணமியில், மக்கள் நலன் வேண்டி சிறப்பு பூஜை மற்றும் மஹா யாகம் நடத்தப்படுகிறது. அம்மன் சன்னதி முன்பு நந்தி எழுந்தருளியிருப்பது இக்கோவிலின் கூடுதல் தனிசிறப்பாகும். மாசி மயான கொள்ளை நிகழ்வின் போ து, சக்தி அம்மா சித்தாங்கு ஆடை தரித்து, மதியம் காய்கறி சைவ கொள்ளை சூரையிடும் நிகழ்வும், இரவில், அசைவக் கொள்ளையிடும் நிகழ்வும் பிரமாண்டமாக நடந்தேறும். இதில் மட்டும், 5,000க்கும் அதிகமான பங்கேற்பர் என்பது குறிப்பிடத்தக்கது. மாசி மகத்தின் போது, உற்சவ அம்மனுக்கு கடல் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கும். மாசி மகத்தின், ஏழாம் நாளில், ஆண்டுக்கொரு முறை உற்சவ தாயார், வீதியுலா வரும் வைபவம், மேளதாளங்கள் முழங்க கோலாகலமாக நடக்கிறது. சித்ரா பவுர்ணமி தினத்தன்று, பால்குடம் எடுக்கும் நிகழ்வு இக்கோவிலில் பிரசித்தம். ஆடிமாதம், செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில், சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்டவை நடக்கின்றன. மூன்றாவது வாரம், அம்மனுக்கு கூழ் வார்த்தல் வைபவம் வெகு விமரிசையாக நடந்துள்ளது. குறிப்பாக, ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையான இன்று, அம்மனுக்கு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இதில், திருமண தடை, குழந்தை பாக்கியம், நீதிமன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்பு உள்ளிட்ட வேண்டுதல் வைத்து, பக்தர்கள் தங்கள் கைகளாலேயே புஷ்பங்களை அம்மனுக்கு சாற்றி வேண்டிக் கொண்டால், நிறைவேறும் பரிகார ஸ்தல மாகவும் இக்கோவில் விளங்கி வருகிறது. விஜயதசமியன்று, சரஸ்வதி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பபட்டு, சக்தி அம்மா, வெள்ளி சூலாயுதத்தால் பள்ளி மாணவர்களின் நாவில் ஓம் என்று எழுதும் வைப வம் வெகு விமரிசையாக நடக்கிறது. அன்றைய தினம் குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகம், பேனா உள்ளிட்டவை இலவசமாக வழங்கப் படுகின்றன. கோவில் ஸ்தாபகர் சக்தி அம்மா அவர்களின், பிரதி வாரம் செவ்வாய் – வெள்ளி கிழமைகளில் நடக்கும் அருள்வாக்கு சொல்லும் நிகழ்விற்கு, சென்னையின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து குவிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கோவில் தொடர்புக்கு 044 - 25991385 சக்தி அம்மா 9840744588 கோவில் நடை திறந்திருக்கும் நேரம் காலை 6:00 – 11:30 மணி வரை மாலை 4:30 – 8:30 மணி வரை அம்மனுக்கு சிறப்பு புஷ்பாஞ்சலி 15.8.2025 வெள்ளிக்கிழமை (இன்று) காலை – 11:30 மணி வழி : திருவொற்றியூ ர் தேரடி மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து, 400 மீட்டர் தொலைவில் உள்ளது. எல்லையம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து, 250 மீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. தனி வாகனங்களில் வருபவர்கள், சென்னை காசிமேடு வழியாக எண்ணுார் விரைவு சாலையில் வந்தால், திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில், தீயணைப்பு நிலையமருகேஉள்ள கோவிலுக்கு வ ர முடியும்.
|