பதிவு செய்த நாள்
15
ஆக
2025
03:08
வெள்ளிக்கிழமை என்பது லட்சுமி தேவிக்கு மிகவும் முக்கியமான நாள். இந்த நாளில் கிராம்பு பரிகாரங்களை செய்து, உங்கள் வீட்டின் சந்தோஷத்தை அதிகரிக்கவும், பணத்தை ஈர்க்கவும் முடியும். வெள்ளிக்கிழமையில் கிராம்பை எப்படி பயன் படுத்தினால் லட்சுமி தேவி நம் வீடு தேடி வந்து அருளையும், செல்வ செழிப்பையும் வழங்குவாள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இந்து மதத்தில் வெள்ளிக் கிழமை மிகவும் முக்கியமானது. இது மிகவும் மங்களகர மான நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் செய்யப்படும் வழிபாடுகள் மட்டுமின்றி, பரிகாரங்களும் செல்வ செழிப்பை ஈர்க்கும் சக்தி கொண்டவை. குறிப்பாக, கிராம்புகளைப் பயன்படுத்தும் சில பரிகாரங்கள் வீட்டில் அதிர்ஷ் டத்தை கொண்டு வரும். இந்திய சமையலில் மட்டுமின்றி ஜோதிட சாஸ்திரத்தில் கிராம்புக்கு ஒரு சிறப்பு இடம் உண்டு. வெள்ளிக்கிழமை கிராம்பு பரிகாரங்களை செய்வதன் மூலம் தடைகள் நீங்கும்.
வெள்ளிக்கிழமை சில எளிய பரிகாரங்கள்
வெள்ளிக்கிழமையில் காலை அல்லது மாலையில் ஒரு வெற்றிலையில் ஒரு கிராம்பு மற்றும் கற்பூரம் சேர்த்து லட்சுமி தேவிக்கு அர்ப்பணிக்கவும். ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே நமஹ என்ற மந்திரத்தை ஜபிக்கவும்.
இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் லட்சுமி தேவி மகிழ்ச்சி அடைவார். அவரது ஆசீர்வாதம் உங்கள் குடும்பத்தில் இருக்கும். வெள்ளிக் கிழமை கிராம்பு பரிகாரம் செய்வதன் மூலம் விருப்பங்கள் நிறைவேறும். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
இந்து மதத்தில் ஒரு நாளில் இரண்டு முறை பூஜை செய்வது முக்கியம். வெள்ளிக்கிழமை அன்று லட்சுமி தேவியை இரண்டு முறை வழிபட வேண்டும். லட்சுமி தேவிக்கு ஆரத்தி எடுக்கும்போது, சிவப்பு திரியில் கிராம்பை வைத்து எரிக்கவும். அல்லது திரியுடன் கிராம்பையும் எரிக்கலாம். இப்படி செய்வதால் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் நீங்கும். நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். இது செல்வம் மற்றும் செழிப்பை அதிகரிக்கும். இந்த கிராம்பு பரிகாரத்தை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் செய்யலாம்.
வெள்ளிக்கிழமை லட்சுமி தேவியை வழிபடும்போது, ரோஜா பூக்களுடன் இரண்டு கிராம்புகளை சேர்த்து அர்ப் பணிக்கவும். இதை தொடர்ந்து 40 வெள்ளிக்கிழமைகள் செய்வது நல்லது. சிவலிங்கத்திற்கும் கிராம்புகளை அர்ப்பணிக்கலாம். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் ஜாதகத்தில் உள்ள கிரக தோஷங்கள் நீங்கும். வாழ்க்கையில் உள்ள பிரச்னைகள் குறையும். பண கஷ்டம் இருந்தால், இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். வீட்டில் பொருளாதார நிலை மேம்படும். லட்சுமி தேவியின் அருளால் செல்வம் பெருகும்.
கடின உழைப்புக்குப் பிறகும் நீங்கள் நினைத்த பலன் கிடைக்கவில்லை என்றாலும், ஒரு முக்கியமான வேலைக்காக வீட்டை விட்டு வெளியே செல்லும் முன், இரண்டு கிராம்புகளை வாயில் போட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் எந்த வேலைக்காக வெளியே செல்கிறீர்களோ, அந்த வேலை நிறைவேறும். தடைபட்ட வேலைகள் கூட சரியாகும்.
வெள்ளிக்கிழமை சுப காரியங்கள் செய்வது மிகவும் நல்லது. ஏனெனில், இது செல்வம் மற்றும் செழிப்புடன் தொடர்புடையது. உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.