Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெள்ளிக்கிழமை கிராம்பை இப்படி ... ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அருட் திருவடி பதித்து திரிசூலம் ஊன்றிய திருத்தலம் திருவடிசூலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அருட் ...
முதல் பக்கம் » துளிகள்
ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்று அழைப்பது ஏன்?
எழுத்தின் அளவு:
ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்று அழைப்பது ஏன்?

பதிவு செய்த நாள்

15 ஆக
2025
03:08

ஆனி,- ஆடி மாதங்களில் தான் மழை பெய்து ஆறுகளில் தண்ணீர் ஓடத் துவங்கும். மழைக்குரிய தெய்வமாகப் போற்றப்பட்ட தெய்வமே மாரியம்மன். ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றே அழைப்பர். ஏன்? ஆடி என்பதே ஒரு தேவமங்கையின் பெயர். அவளுக்கு ஏற்பட்ட சாபத்தால் வேப்பமரமாகி, அதே சாபத்தின் மூலம் அம்பிகைக்கு உரிய விருக்ஷமானாள். அதனால் வேப்பமரம் மிகவும் புனிதமானது என்கிறது புராணம். ஆடி மாதத்தில் தான் பூமாதேவி அவதரித்தாள். அந்த அம்பிகைக்கு விழா எடுப்பதன் மூலம், அம்பிகையின் அருளுடன் வளமாக வாழவே, அம்மன் கோவில்களில் பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன.


‘ஆடிப் பட்டம் தேடி விதை’ என்பது பழமொழி. ஆனி,- ஆடி மாதங்களில் தான் மழை பெய்து ஆறுகளில் தண்ணீர் ஓடத் துவங்கும். அதனால் அப்பொழுது விவசாய வேலைகள் துவங்குவதால் விவசாயிகளின் இல்லத்தில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் குடிகொள்ளும்.


இம்மாதத்தில்தான் தன்னிரு திருக்கரங்களில் விவசாயத்திற்கு ஏற்ற கலப்பையையும், உலக்கையையும் கொண்டு விளங்கும் அன்னை வராகிக்கு உரிய ஆஷாட நவராத்திரி விழாவும் கொண்டாடப் படுகிறது. பண்டைய காலத்தில் பஞ்சபூதங்களை வணங்கி வந்தபோது, மழைக்குரிய தெய்வமாகப் போற்றப்பட்ட தெய்வமே மாரியம் மன். பருவ கால மாறுதலால் ஏற்படும் வெப்ப சலன மாறுபாடுகள் காரணமாக ஏற்படக் கூடிய அம்மை நோயை தீர்ப்பவளாக மாரியம்மனை வணங்குவர்.


அதனால் அவளுக்கு உகந்த கூழ் காய்ச்சி, அம்பிகையின் பக்தர்களுக்கு வழங்குவர். இது மிக்க மருத்துவ குணம் மிக்கது. இதை ‘ஆடிக்கஞ்சி’ என்றும் அழைப்பர். அதிமதுரம், சீரகம், திப்பிலி, சின்ன வெங்காயம், திரிகடுகம், குன்னிவேர், உழிஞ்சி வேர், சீற்றாமுட்டி, கடலாடி வேர் - இவற்றை இடித்து, ஒரு வெள்ளைத் துணியில் கட்டி, காய்ச்சிய கஞ்சியில் இதை சிறிது நேரம் போட்டு ஊறவைத்து, எடுத்துவிட, அதன் சாரம் கஞ்சியில் இறங்கும்.பின்னர் மருத்துவ குணமிக்க இக்கஞ்சியை எல்லாருக்கும் கொடுப்பர்.


ஆடி மாதத்தில் வரும் பூரத்தன்று பூமாதேவியின் அம்சமாக அவதரித்தாள் ஆண்டாள். கண்ணனையே காதலித்து ஸ்ரீரங்கத்தில் அவர் திருக்கரங்களைப் பற்றி திருமாலுடன் இரண்டறக் கலந்தவள். அன்றைய தினத்தில் ஆண்டாள் அவதரித்த திருவில்லிபுதூரிலும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலிலும் மற்றும் பல திருமால் கோவில்களிலும் ஆடிப்பூர விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இதேபோல் சிவன் கோவில்களில் அன்று அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் சிறப்பாக நடைபெறும். அன்று அன்னையை விரதமிருந்து வழிபட்டால் அஷ்டமா சித்திகளும் கைகூடும் என்பர்.

 
மேலும் துளிகள் »
temple news
நவராத்திரி முடிந்த பத்தாவது நாளில் விஜயதசமியை கொண்டாடுகிறோம். இதன் சிறப்புகளை பார்ப்போம்.புதிய ... மேலும்
 
temple news
இன்று துர்காஷ்டமி. எதிரிக்கு கூட, கருணை செய்யும் இரக்கமுள்ள தெய்வமே துர்கா. துர்கையை வழிபட ஏற்ற தினம் ... மேலும்
 
temple news
சிக்கமகளூரு மாவட்டத்தின் சிக்கமகளூரு டவுனில் இருந்து 16 கி.மீ., தொலைவில் மல்லேனஹள்ளி கிராமம் உள்ளது. ... மேலும்
 
temple news
தாவணகெரே மாவட்டம், ஜகலுார் தாலுகா கல்தேவாராபுரா கிராமத்தில் உள்ளது ஸ்ரீ கல்லேஸ்வர் கோவில். ... மேலும்
 
temple news
திருப்பதிக்கு சென்று வந்தால் திருப்பம் வரும் என்று கூறுவது உண்டு. இதனால், ஆண்டிற்கு ஒரு முறை பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar