செம்பை சங்கீத உற்சவத்தின் பொன்விழா: கலை கட்டிய கருத்தரங்கு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஆக 2025 02:08
பாலக்காடு; செம்பை சங்கீத உற்சவத்தின் பொன்விழாவையொட்டி நடந்த கருத்தரங்கு வெகு விமர்சையாக நடைபெற்றது.
கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற, குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், ஆண்டு தோறும், ஏகாதசி உற்சவத்தை ஒட்டி, நடக்கும் செம்பை சங்கீத உற்சவத்தின் பொன்விழாவின் துவக்க விழா கடந்த ஆக. 17ம் தேதி பாலக்காடு மாவட்டம் மும்பை கிராமத்தில் தேவஸ்தான துறை அமைச்சர் வாசவன் துவக்கி வைத்தார். விழாவின் நிகழ்வுகள் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நடக்க உள்ளது. இந்த நிலையில் விழாவை ஒட்டி உள்ள கருத்தரங்கு இன்று நடந்தது. பாலக்காடு அரசு செம்பை நினைவு சங்கீத கல்லூரியில் நடந்த கருத்தரங்கை கல்லூரி முதல்வர் பேராசிரியர் மனோஜ் குமார் துவக்கி வைத்தார். குருவாயூர் கோவில் நிர்வாக குழு உறுப்பினர் மனோஜ் தலைமை வகித்தார். கோவில் நிர்வாக குழு தலைவர் விஜயன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். "கலை இதழியல்" என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் முனைவர் ஜார்ஜ்.,எஸ்.,பாள் ஆய்வுக் கட்டுரையாற்றினார். பிரசாந்த் கிருஷ்ணா மதிப்பீட்டாளராக பங்கேற்றனர். நிகழ்ச்சியில் செம்பை சங்கீத உற்சவ துணை குழு உறுப்பினர் ஆனயடி பிரசாத், செம்பை சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.