காளஹஸ்தி சிவன் கோயிலில் பவித்ரோத்சவம் துவக்கம்; வழி எங்கும் பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03செப் 2025 05:09
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு பவித்ரோத்சவம் இன்று புதன்கிழமை துவங்கியது. இன்று முதல் வரும் 07ம் தேதி வரை நடைபெறுகிறது.
காளஹஸ்தி சிவன் கோயில் பவித்ரோத்சவ விழாவை முன்னிட்டு, காலை 10.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் அந்தாராலய தரிசனம் ரத்து செய்யப்படும். மேலும், வழக்கமாக கோயிலில் தினந்தோறும் அதிகாலையில் நடைபெறும் கோ பூஜை மற்றும் சுப்ரபாத சேவைகளை தவிர மற்ற அனைத்து ஆர்ஜித சேவைகளும் 07ம் தேதி வரை ரத்து செய்யப்படும். ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் ராகு கேது சர்ப்ப தோஷ நிவர்த்தி பூஜைகள் வழக்கம் போல் நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் பவித்ரோத்சவத்தின் ஒரு பகுதியாக, இன்று காலை கோயில் வளாகத்தில் உள்ள குரு தக்ஷிணாமூர்த்தி சன்னதி அருகில் கலசம் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து பரத்வாஜ் மகரிஷி, சிலந்தி, பாம்பு, யானை ஆகிய உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றன. உற்சவ மூர்த்திகள் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் இருந்து மேள தாளங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க நான்கு மாட வீதிகளிலும் ஊர்வலம் நடைபெற்றன. வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.