திருக்கோவிலூர் வேணுகோபாலன் ஜெயந்தி மகோத்சவத்தில் உரியடி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16செப் 2025 10:09
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் வேணுகோபாலன் ஜெயந்தி விழாவின் 2ம் நாளான நேற்று உரியடி உற்சவம் நடந்தது.
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வேணுகோபால சுவாமி ஜெயந்தி மகத்துவ விழா கடந்த 14ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. விழாவின் 2ம் நாளான நேற்று காலை 6:00 மணிக்கு மூலவர் விஸ்வரூப தரிசனம், 9:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள், சந்தான கிருஷ்ணன் புறப்பாடாகி சன்னதி வீதியில் உரியடி விழா நடந்தது. பகல் 10:00 மணிக்கு சத்யபாமா ருக்மணி சமேத வேணுகோபாலன் மற்றும் உற்சவர் ராஜகோபாலன் ஆகியோருக்கு அலங்கார திருமஞ்சனம், சேவை சாற்றுமரை நடந்தது. மாலை 6:30 மணிக்கு சத்யபாமா ருக்மணி சமேத வேணுகோபாலன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கண்ணாடியறையில் சிறப்பு பூஜை, சேவை சாற்றுமரை நடந்தது. ஜீயர் தேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் உத்தரவின் பேரில், கோவில் ஏஜென்ட் கோலாகளன் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.