சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி விழா; செப்.23ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16செப் 2025 10:09
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆனந்தவல்லி அம்மன் நவராத்திரி திருவிழா செப். 23ல் துவங்கி அக்டோபர் 2 வரை நடக்கிறது.
செப். 23 காலை 5:00 மணிக்கு மேல் ஆனந்தவல்லி அம்மனுக்கு காப்பு கட்டுதலும், மாலை 6:00 மணிக்கு கொலு பூஜை, சிறப்பு வழிபாடு நடக்கிறது. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 30 வரை தினமும் இரவு 7:00 மணிக்கு கொலு பஜனை நடக்கிறது. அக். 1 அன்று இரவு 7:00 மணிக்கு சரஸ்வதி பூஜை, ஆனந்தவல்லி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பஜனை, சிறப்பு வழிபாடு நடக்கிறது. அக். 2 அன்று விஜயதசமி வழிபாடும், ஆனந்தவல்லி அம்மன் மகிஷாசுர வர்த்தினி அலங்காரத்தில் எழுந்தருளி அம்பு போடும் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன், கோயில் ஊழியர்கள் செய்துள்ளனர். நவராத்திரி வழிபாட்டினை முன்னிட்டு வழக்கம்போல் தினமும் காலை 6:00 மணி முதல் 10:00 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். இரவில் தங்குவதற்கு யாருக்கும் அனுமதி கிடையாது என செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.