ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் பிரதிஷ்டை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16செப் 2025 11:09
ரெகுநாதபுரம்; ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் இரண்டாம் பிரதிஷ்டை விழா நேற்று நடந்தது. வல்லபை ஐயப்பன் கோயிலில் நேற்று காலை 10:00 மணிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள், ஹோம வேள்விகள் உள்ளிட்டவைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜைகளை தலைமை குருசாமி மோகன் செய்திருந்தார். சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயில் சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.