பெரம்பலூர் சங்குபேட்டை வரதராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி சனி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20செப் 2025 02:09
பெரம்பலூர்; சங்குபேட்டையில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் (ஆப்பூரன் கோவில்) திரு கோயிலில் புரட்டாசி மாதம் முதல் சனிகிழமையையொட்டி, சிறப்பு பூஜை, மற்றும் அன்னதானம் நடைபெற்றது.
பெரம்பலூர் டவுன் சங்குபேட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத வரும் முதல் சனிகிழமையை யொட்டி வரதராஜ பெருமாளுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், ஜவ்வாது, தேன் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து, வரதராஜ பெருமாளுக்கு வண்ண மலர்களால் அலங்கரித்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து, பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் மஹா தீபாராதனைகள் செய்து பெண்கள் மற்றும் பொதுமக்கள் வழிபட்டனர். புரட்டாசி முதல் சனிகிழமையையொட்டி ஸ்ரீஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாகவும் மற்றும் 19வது வார்டு சங்குபேட்டை அன்னதான குழுவினர் சேர்ந்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள். விழாவில் முக்கிய பிரமுகர்கள், மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.