தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25செப் 2025 10:09
மேட்டுப்பாளையம்; தென் திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் நவராத்திரி, பிரம்மோற்சவம் நிகழ்ச்சி நேற்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையத்தில், தென்திருப்பதி திருமலை ஸ்ரீவாரி ஆலயம் அமைந்துள்ளது. இங்கு புரட்டாசி மாதம் நவராத்திரி, பிரம்மோற்சவம் நிகழ்ச்சி நேற்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் ஸ்ரீ மலையப்ப சுவாமி யாக சாலையில் எழுத்தருளினார். அங்கு அங்குரார்ப்பணம் பேரி பூஜை முடிந்து விஸ்வக்ஷ்சேனருடன் நான்கு மாட வீதிகளில் வலம் வந்தார். கொடியேற்றத்தை தொடர்ந்து பெரிய சேஷ வாகனத்தில் மீண்டும் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் நான்கு மாட வீதியில் வலம் வந்தார். நாளை சின்னசேஷ வாகனம், அன்னபக்ஷி வாகனம், நாளை மறுநாள் சிம்ம வாகனம், முத்து பந்தல் வாகனம் நிகழ்வுகள் நடக்க உள்ளன. தொடர்ந்து வரும் 28-ம் தேதி கருட சேவையும், அதனை தொடர்ந்து அக்டோபர் 1ம் தேதி திருத்தேர் வடம் பிடித்தலும் நடக்க உள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை அன்னூர் கே.கோவிந்தசாமி நாயுடு குடும்பத்தினர் செய்திருந்தனர்.