நவராத்திரி விழா வீடுகளில் கொலு வழிபாடு; அம்மன் பாடல்கள் பாடி குழந்தைகள் குதூகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26செப் 2025 12:09
மதுரை; மதுரையில் நவராத்திரி விழாவையொட்டி கோவில்கள் மற்றும் வீடுகளில் கொலு வைத்து கொண்டாடப்பட்டு வருகிறது. ஒன்பது நாட்கள் நடைபெறும் விழாவில் துர்க்கை லட்சுமி சரஸ்வதி என முப்பெரும் தேவியரை போற்றி வணங்கி வருகின்றனர். வீடுகளில் நடைபெற்ற கொலு வழிபாட்டில், பெரியவர் முதல் குழந்தைகள் வரை பாடல்கள் பாடி வழிபட்டனர்.
மதுரையில் நவராத்திரி விழாவையொட்டி கோவில்கள் மற்றும் வீடுகளில் கொலு வைத்து கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் புரட்டாசி அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் நவராத்திரி விழா துவங்கி ஒன்பது நாட்கள் நடத்தப்படுகிறது இதில் துர்க்கை லட்சுமி சரஸ்வதி என முப்பெரும் தேவியரை போற்றி வணங்கும் வகையில் நவராத்திரி விழா கோவில்களிலும் வீடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு திருவிழா கடந்த 23ஆம் தேதி துவங்கியது. இதனையொட்டி மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் கோவில், திருநகர் உட்பட பல்வேறு கோவில்களிலும் கொலு வைத்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதே போல வீடுகளிலும் கொலு பொம்மைகள் வைத்து வழிபாடுகள் நடத்தப்படுகிறது. வேடர்புளியங்கும் பகுதியில் வீடுகளில் கொலு வைத்து, பூஜைகள் நடத்தி மகளிருக்கு மங்களப் பொருட்கள் வழங்கப்பட்டன.