தொண்டாமுத்தூர்; கோவை ஈஷா யோகா மையத்தில், நவராத்திரி விழா, கைவினைப் பொருட்கள் மற்றும் கலைநிகழ்சிகளுடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கோவை ஈஷா யோகா மையத்தில், நவராத்திரி விழா கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல் துவங்கி, 30ம் தேதி வரை, 9 நாட்கள் நடக்கிறது. நாள்தோறும், லிங்க பைரவி வளாகத்தில் அபிஷேக ஆராதனைகள் நடந்து வருகிறது. சூர்ய குண்ட மண்டபத்தில், கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளது. சூர்ய குண்ட மண்டபத்தில், நாள்தோறும் மாலை, 6:00 மணிக்கு, பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. கடந்த, 22ம் தேதி, ப்ராஜெக்ட் சம்ஸ்கிருதி கலைஞர்களின் நடன நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்றுமுன்தினம் அம்பி சுப்பிரமணியத்தின் கர்நாடக வயலின் கச்சேரி நடந்தது. இன்று ப்ராஜெக்ட் சம்ஸ்கிருதியின் இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான கலந்து கொண்டனர். சூரிய குண்ட மண்டபத்தின் எதிரே ஹேண்ட்ஸ் ஆப் கிரேஸ் என்ற தலைப்பில், கைவினை பொருட்களின் விற்பனை மற்றும் கண்காட்சி நடக்கிறது. இதில் கைத்தறி நெசவு துணி வகைகளும் கைவினை பொருட்களும், விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. நாளை மாலை, 6:00 மணிக்கு, புஷ்பவனம் குப்புசாமியின் கிராமிய கலை நிகழ்ச்சி நடக்கிறது.