Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news யானைகளின் அணிவகுப்புடன் ... நாட்டரசன்கோட்டையில் புரட்டாசி பிரமோத்ஸவ திருக்கல்யாணம் கோலாகலம் நாட்டரசன்கோட்டையில் புரட்டாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இருளில் மூழ்கும் ராமேஸ்வரம் கோயில் கோபுரங்கள் : பக்தர்கள் வேதனை
எழுத்தின் அளவு:
இருளில் மூழ்கும் ராமேஸ்வரம் கோயில் கோபுரங்கள் : பக்தர்கள் வேதனை

பதிவு செய்த நாள்

30 செப்
2025
04:09

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கோபுரங்கள் மின்னொளி இன்றி இருளில் மூழ்குவதால், பக்தர்கள் வேதனை அடைகின்றனர்.


ராமாயண வரலாற்றில் தொடர்புடைய ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. இக்கோயிலுக்கு தினமும் ஏராளமான வட, தென் மாநில பக்தர்கள் வருகை தந்து தரிசிக்கின்றனர். உலக பிரசித்த பெற்ற இக்கோயிலில் பக்தர்களின் உண்டியல் காணிக்கை, சுவாமி தரிசன கட்டணம், புனித நீராட கட்டணம் என ஓராண்டுக்கு ரூ. 30 கோடி ஹிந்து அறநிலைத்துறைக்கு வருவாயாக கிடைக்கிறது. ஆனால் கோயில் நான்கு கோபுர நிலைகளில் மஞ்சள் நிற மின்விளக்குகளை தவிர, கோபுரங்களை பக்தர்கள் கண்டு தரிசிக்கும் வகையில் மின்விளக்கு இல்லாததால், கோபுரங்கள் இரவில் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. இதனால் இரவில் வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள், கோயில் கோபுரமும் அதன் அடையாளத்தையும் காண முடியாமல் திணறுகின்றனர். ஓராண்டுக்கு ரூ.30 கோடி வருவாய் ஈட்டும் இக்கோயில் கோபுரங்களை மின்னொளியில் ஜொலித்து பக்தர்களுக்கு காட்சிப்படுத்திட ஹிந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்காமல் மவுனம் காப்பது கண்டனத்திற்குரியது என பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.


இதுகுறித்து கோயில் ஊழியர் கூறுகையில் : கோயில் கோபுரங்கள் இருளில் ஜொலிக்கும் வகையில் விரைவில் எமினேஷன் லைட் பொருத்தப்பட உள்ளது என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 
temple news
மதுரை: தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில், சிவலிங்கத்தை தழுவி, தரிசிக்க சூரியக்கதிர்கள் துவாரங்கள் ... மேலும்
 
temple news
 டேராடூன்: உத்தரகண்டில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத் ஆகிய நான்கு கோவில்களில் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ஓய்வு கூடம் முன்பு டூவீலர்களை நிறுத்தி ஆக்கிரமித்து உள்ளதால், பக்தர்கள் ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, ஜமீன் ஊத்துக்குளி மாகாளியம்மன் கோவிலில் கடந்த, 24ம் தேதி சக்தி கும்பம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar