Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செத்தவரை மோன சித்தர் அவதார ... திருக்கோவிலூர் சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு திருக்கோவிலூர் சாய்பாபா கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி ஏகாதசி வைபவம்; பெருமாளுக்கு ஸ்தபன திருமஞ்சனம்
எழுத்தின் அளவு:
காரமடை அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி ஏகாதசி வைபவம்; பெருமாளுக்கு ஸ்தபன திருமஞ்சனம்

பதிவு செய்த நாள்

03 அக்
2025
05:10

மேட்டுப்பாளையம்; புரட்டாசி மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவில் நடந்த வைபவத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவில். இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் ஏகாதசி வைபவம் நடைபெறும். இன்று புரட்டாசி மாத சுக்ல பட்ச, ஏகாதசி வைபவம் நடந்தது. ஏகாதசியை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறந்து, மூலவர் அரங்கநாத பெருமாளுக்கு, சிறப்பு திருமஞ்சனம், கால சந்தி பூஜை ஆகியவை நடந்தன. பின்பு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள், சிறப்பு அலங்காரத்தில், கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். சுவாமிக்கு விஷ்வக்சேனர் ஆராதனம், புண்ணியா வசனம், கலச ஆவாஹனம் நடந்தது. பின்பு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாளுக்கு ஸ்தபன திருமஞ்சனம் ஆகியவை நடந்தது. அரங்கநாத பெருமாள் பட்டு உடுத்தி, வெள்ளி சப்பரத்தில், வெண்பட்டு குடை சூழ மேள தாளங்கள் முழங்க, கோவிலில் வலம் வந்து ஆஸ்தானம் அடைந்தார். தொடர்ந்து உச்சிக்கால பூஜை, சாற்றுமுறை சேவித்து, மகா தீபாராதனை நடந்தது. பின்பு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த வைபவத்தில் கோவில் ஸ்தலர்த்தார்கள், அர்ச்சகர்கள், கோவில் செயல் அலுவலர், அறங்காவலர்கள் பக்தர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar