உடுமலை ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் திருக்கல்யாண வைபவம் பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04அக் 2025 11:10
உடுமலை; உடுமலை பூமாலை சந்து ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், நேற்று அம்மன் திருக்கல்யாண வைபவம் நடந்தது. கோவிலில், கடந்த மாதம் 22ல், சக்தி அழைத்து கொலு வைத்தலுடன் நவராத்திரி பூஜைகள் துவங்கியது. நாள்தோறும் பல்வேறு சிறப்பு பூஜைகள் மற்றும் சொற்பொழிவு நடைபெற்றது. கோவில் வளாகத்தில் நேற்று காலை, 9:30 மணிக்கு ராமலிங்கேஸ்வரருக்கும், அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இத்திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில், அம்மன் திருவீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை தேவாங்கர் சமூக நல மன்றத்தினர் செய்திருந்தனர்.