Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை தங்க கவசம் எடை குறைந்தது ... மைசூரு சாமுண்டி மலையில் மகர ரத உத்சவம்; பக்தர்கள் குவிந்தனர் மைசூரு சாமுண்டி மலையில் மகர ரத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரவசந்தராயர் மண்டபத்தை தவிர்த்து மதுரை மீனாட்சி கோவிலில் கும்பாபிஷேகமா?; அரசுக்கு ஆபத்து என எச்சரிக்கை
எழுத்தின் அளவு:
வீரவசந்தராயர் மண்டபத்தை தவிர்த்து மதுரை மீனாட்சி கோவிலில் கும்பாபிஷேகமா?; அரசுக்கு ஆபத்து என எச்சரிக்கை

பதிவு செய்த நாள்

07 அக்
2025
11:10

மதுரை; ‘மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை, வீரவசந்தராயர் மண்டபத்தை தவிர்த்து நடத்தலாம் என்றால் வரும் டிசம்பரிலேயே நடத்த தயார்’ என அரசு அறிவித்த நிலையில், ‘ஆகம விதிப்படி கோவில் முழுதும் திருப்பணிகள் முடிந்த பிறகே நடத்த வேண்டும்’ என, பக்தர்கள், ஹிந்து அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர். மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம், 2009ல் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது ஐதீகம். 2018 பிப்., 2ல் கிழக்கு கோபுரத்தை ஒட்டியுள்ள வீரவசந்தராயர் மண்டபத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில், மண்டபம் முற்றிலும் உருக்குலைந்தது. இதன் சீரமைப்பு பணி நடந்து கொண்டிருப்பதால், கோவில் கும்பாபிஷேகம் தள்ளி போகிறது. இரு ஆண்டுகளுக்கு முன் சட்டசபையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘2025க்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும்’ என்றார்.


ஹிந்துக்கள் எதிர்ப்பு; இதை தொடர்ந்து, திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, 70 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. சில காரணங்களால் வீரவசந்தராயர் மண்டபம் சீரமைப்பு பணி முடிய தாமதம் ஆகலாம். இதற்கிடையில் கும்பாபிஷேகம் தொடர்பாக உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில், ‘2026 ஜனவரிக்குள் நடத்தப்படும்’ என, அறநிலையத்துறை தெரிவித்தது. இரு நாட்களுக்கு முன் கோவிலில் ஆய்வு செய்த அத்துறை அமைச்சர், ‘பிப்ரவரிக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும். வீரவசந்தராயர் மண்டபத்தை தவிர்த்து நடத்தலாம் என பட்டர்கள் தெரிவித்தால், டிசம்பரிலேயே நடத்த தயார்’ என அறிவித்தார். இதற்கு, ஹிந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கோவில் முழுதும் திருப்பணிகள் முழுமையாக முடிந்த பிறகே கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என ஹிந்து அமைப்பினரும், பக்தர்களும் வலியுறுத்திஉள்ளனர். 


அரசுக்கு ஆபத்து வரும்.. பட்டர்கள் சிலர் கூறியதாவது: ஆகம விதிப்படி முழுமையாக திருப்பணிகள் முடிந்த பிறகே கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். அரைகுறை பணிகளுடன் நடத்தினால் அது பலன் அளிக்காது. ஆளும் அரசுக்கும் ஆபத்து ஏற்படும். இதற்கு பல உதாரணங்கள் உள்ளன. 2009க்கு பின், 2021ல் கும்பாபிஷேகம் நடத்தி இருக்க வேண்டும். ஆகம விதிப்படி, வீரவசந்தராயர் மண்டபத்தை தவிர்த்து நடத்தலாம் என்றால், இரு ஆண்டுகளுக்கு முன்பே அதை செய்திருக்கலாமே. தேர்தல் நெருங்குவதால் அதற்குள் நடத்த வேண்டும் என்பதற்காக அவசரகதியில் திருப்பணிகள் நடந்து வருகின்றன. வீரவசந்தராயர் மண்டபத்தை தவிர்த்து நடத்தலாமா என்று, பட்டர்களிடம் ஆலோசிக்கப்படும் என சில பட்டர்கள் பெயரை குறிப்பிட்டு அமைச்சர் கூறினார். அவர்கள், அரசு நியமித்த குழுக்களில் இருந்தவர்கள்; இருப்பவர்கள். அவர்கள் அரசின் முடிவுக்கு சாதகமாக தான் கருத்து தெரிவிக்க முடியும். ‘ஆகம விதிகளை மீறி நடத்தினால், அதற்கு பரிகாரம் செய்து கொள்ளலாம்’ என அவர்கள் தெரிவித்தாலும் ஆச்சரியமில்லை. அரசின் நலன் கருதியும், கோவிலின் நலன் கருதியும் முழுமையாக திருப்பணிகள் முடிந்த பிறகே கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நெல்லிக்குப்பம்: நடனபாதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை விரைந்து நடத்த கோரிக்கை ... மேலும்
 
temple news
நத்தம்: திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோயில் விநாயகர் சன்னதியில் சங்கடஹர சதுர்த்தி விழா ... மேலும்
 
temple news
கம்பம்: கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டி கவுமாரியம்மன் கோயில் திருப்பணிகளை, எம்.பி. தங்க ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் 7 நாட்கள் நடக்கும் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; மயிலாடுதுறையில் நடந்த தருமபுரம் ஆதினத்தின் 60வது மணிவிழாவை முன்னிட்டு, ஈஷா காவேரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar