திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் ரூ.4.56 லட்சம் காணிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16அக் 2025 10:10
பண்ருட்டி: திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் மூலம் ரூ.4.56 லட்சம் காணிக்கையாக பெறப்பட்டது. பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் உண்டியல் திறந்து பக்தர்களின் காணிக்கை பணம் எண்ணும் பணி நடந்தது. ஆய்வாளர் சீனுவாசன் தலைமையில் கோவில் நிர்வாக அலுவலர் ராஜ்குமார் முன்னிலையில் நடந்தது. உண்டியல் எண்ணியதில் ரூ.4லட்சத்து 56ஆயிரத்து 684 ரூபாய் மற்றும் 81 கிராம் தங்கம், 390 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியல் காணிக்கையாக பெறப்பட்டது.