கொங்கணகிரி கந்த பெருமான் கோவில் சூரசம்ஹார விழா : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27அக் 2025 11:10
அனுப்பர்பாளையம்; திருப்பூர், காலேஜ் ரோடு கொங்கண கிரி அருள்மிகு ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஶ்ரீ கந்த சுப்பிரமணியசுவாமி திருகோவிலில் 15 ம் ஆண்டு கந்த சஷ்டி சூர சம்ஹாரம் மற்றும் திருகல்யாண விழா கடந்த 22 ம் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவையொட்டி, இன்று 27 ம் தேதி திங்கட்கிழமை மாலை 4:30 மணிக்கு ஶ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஶ்ரீ கந்த பெருமானுக்கு மஹா அபிஷேகம் மற்றும் வேல் பூஜை நடைபெற்றது. மாலை 5:30 மணிக்கு மேல் 7:45 மணிக்குள் சூரசம்ஹார விழா நடைப்பெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு இந்த பெருமானை வழிபட்டனர். முன்னதாக கோவில் வளாகத்தில் பெருங்சலங்கையாட்டம் நடைபெற்றது. 28 ம் தேதி காலை 8:30 மணிக்கு கந்த பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைப்பெறுகிறது. தொடர்ந்து, 9:30 மணிக்கு திருக்கல்யாணம், நிகழ்ச்சி நடக்கிறது. மதியம் 12:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை ஆண்டி பாளையம் ஆறுபடை முருக பக்தர்கள் குழு, அணைப்பாளையம் ஊர் பொது மக்கள், கொங்கனகிரி தீர்த்த அபிஷேக குழு, ஆண்டிபாளையம் ஊர் பொது மக்கள் ஆகியோர் செய்து இருந்தனர்.