நீலகிரி மாவட்டம், குன்னூர் வி.பி., தெரு பகுதியில் அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 21ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. விழாவில், முருகனுக்கு அபிஷேகம் கொடியேற்றம், அன்னதானம், பச்சை சாத்துதல், உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று சத்ரு சம்ஹார திருசதி பாராயணம், வேல் வாங்கும் நிகழ்ச்சி, சுவாமி திருவீதி உலா, சூரசம்ஹாரம் உள்ளிட்டவை நடந்தன. இன்று திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடந்தது. விழாவில் வேத பாராயணங்கள் முழங்க, முருகன், வள்ளி, தெய்வயானை திருமண வைபவம் நடந்தது. பக்தர்களுக்கு, பிரசாத விநியோகம், அன்னதானம் வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.