கோவை சிருங்கேரி சாரதா பீடத்தில் ஆதிசங்கரர் சிலை பிரதிஷ்டை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29அக் 2025 11:10
கோவை; கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி.புதூரில் உள்ள ஸ்ரீ சிருங்கேரி ஜகத்குரு மகா சமஸ்தானம் தட்சிணாய ஸ்ரீ சாரதா பீடத்தின் கோவை கிளை, சிருங்கேரி சிவகுரு மகாவிஷ்ணு சேத்திரம் கோவிலில் ஸ்ரீ ஆதிசங்கரர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. புதுக்கோட்டை ஸ்ரீ புவனேஸ்வரி பீடம் ஸ்ரீ ப்ரணவாநந்தா மகா சுவாமிகள் தலைமையில் விழா நடைபெற்றது. இன்று 29ம் தேதி புதன்கிழமை காலை 9 மணியளவில கணபதி ஹோமத்துடன் துவங்கிய விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.