Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீசையுடன் காட்சியளிக்கும் ஹனுமன் துளுநாட்டில் பரசுராமருக்கு பிரத்யேக கோவில் துளுநாட்டில் பரசுராமருக்கு ...
முதல் பக்கம் » துளிகள்
நாக தோஷம் போக்கும் நாகேஸ்வரர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நாக தோஷம் போக்கும் நாகேஸ்வரர்

பதிவு செய்த நாள்

05 நவ
2025
09:11

ஹாசன் மாவட்டம், நவிலே கிராமத்தில் ஸ்ரீ நாகேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் 900 ஆண்டுகள் பழமையானது. விஜயநகர பேரரசு உட்பட பல ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்து உள்ளது. காலப்போக்கில் உருமாறி உள்ளது.


இந்த கோவில் பாரம்பரிய தென்னிந்திய கட்டடக் கலையை பிரதிபலிக்கிறது. கோவில் நுழைவு வாயிலில் சிறிய கோபுரம் உள்ளது. கருவறைக்கு செல்லும் முன், கல் மண்டபம் உள்ளது. கருவறையின் உட்புறச் சுவர்களில் நாகதேவதை சிற்பங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இங்கு விநாயகர், பார்வதி தேவிக்கு தனித்தனி சன்னிதிகள் உள்ளன.


நம்பிக்கை இந்த கோவிலின் மூலவராக நாகேஸ்வரர் அருள்பாலிக்கிறார். நாகேஸ்வரர், சிவலிங்க வடிவில் உள்ளார். இந்த லிங்கம் சுயம்புவாக தோன்றி உள்ளது. இவர் பாம்புகளுடன் தொடர்புடையவர். நாகேஸ்வரரை மனமுருக வேண்டினால் நாகதோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் பெரும் நம்பிக்கை.


இதற்காக பல மைல் துாரத்திலிருந்து பக்தர்கள் வருகை தருவதை பார்க்க முடியும். அதுமட்டுமின்றி, மலைவாழ் பகுதியில் இருப்பவர்களும், பாம்புகளை தெய்வமாக வழிபடக்கூடியவர்களும், இக்கோவிலுக்கு வருகை தருகின்றனர்.


நேர்த்திக்கடன் இந்த கோவில் அமைந்துள்ள இடத்தில் முன்னொரு காலத்தில் நாகதோஷத்தால் அவதிப்பட்ட முனிவர், சிவபெருமானிடம் தோஷம் நீங்க பிரார்த்தனை செய்தார். அவரின் பிரார்த்தணையை கேட்ட சிவபெருமான், முனிவர் முன் தோன்றி, தோஷத்தை நீக்கினார். அந்த இடத்திலேயே இந்த கோவில் அமைந்தது.


இங்கு வரும் பக்தர்களுக்கு நாக தோஷம் மட்டுமின்றி குழந்தை இல்லாதவர்கள், திருமணம் தாமதம் போன்றவை தீர வேண்டுகின்றனர். இந்த வேண்டுதல்கள் நிறைவேறியதும் பக்தர்கள், தங்கள் நேர்த்திக்கடனை கோவிலுக்கு வந்து செலுத்துவதை நம்மால் பார்க்க முடியும்.


இந்த கோவிலில் ‘மஹாசிவராத்திரி’ விசேஷமாக கொண்டாடப்படும். அப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தருவர். அதுமட்டுமின்றி ஒவ்வொரு திங்கட்கிழமை, பிரதோஷங்களின் போதும் சிறப்பு பூஜைகள், அலங்காரம் சிவபெருமானுக்கு செய்யப்படும். இக்கோவில் காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை திறந்திருக்கும். 

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
பெங்களூரில் வரலாற்று பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு பஞ்சம் இல்லை. ஒவ்வொரு பகுதியிலும், புராதன ... மேலும்
 
temple news
பாகல்கோட் மாவட்டம், பாதாமி பகுதியில் மலேகட்டி சிவன் கோவில் உள்ளது. இக்கோவில் சாளுக்கியர் களால் கி.பி., ... மேலும்
 
temple news
பெங்களூரில் இருந்து துமகூரு செல்லும் சாலையில் நெலமங்களா டவுன் அரிசினகுன்டே பகுதியில் ஸ்ரீவிஸ்வரூப ... மேலும்
 
temple news

புகழ் பெற வேண்டுமா செப்டம்பர் 28,2026

நரசிம்மர், கருடன், பெரியாழ்வார் மூவருக்குரிய நட்சத்திரம் சுவாதி. ஸ்ரீவில்லிபுத்துாரிலில் ஆனி மாதம் ... மேலும்
 
temple news
ஓம் அனுமனே போற்றிஓம் அஞ்சனை மைந்தனே போற்றிஓம் அறக்காவலனே போற்றிஓம் அவதார புருஷனே போற்றி ஓம் அறிஞனே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar