Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சத்ய சாய் பாபாவின் 100வது பிறந்தநாள் ... சத்யசாயி பாபாவின் நூறாவது பிறந்தநாள் விழா; விளக்கு பூஜை சத்யசாயி பாபாவின் நூறாவது ...
முதல் பக்கம் » சத்ய சாய் 100: தெய்வீக அன்பின் நூற்றாண்டு விழா 2025 » செய்திகள்
ஸ்ரீ சத்யசாய் நிறுவன பட்டமளிப்பு விழா; நாளை பங்கேற்கிறார் துணை ஜனாதிபதி
எழுத்தின் அளவு:
ஸ்ரீ சத்யசாய் நிறுவன பட்டமளிப்பு விழா; நாளை பங்கேற்கிறார் துணை ஜனாதிபதி

பதிவு செய்த நாள்

21 நவ
2025
11:11

புட்டபர்த்தி: ஸ்ரீ சத்யசாய் உயர்கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்று உரை நிகழ்த்த உள்ளார்.


ஆந்திரா மாநிலம், புட்டபர்த்தியில், ஸ்ரீசத்ய சாய் பாபாவின் நுாற்றாண்டு பிறந்த நாள் கொண்டாட்டம் கடந்த நவ., 13ம் தேதி தொடங்கி, வரும் 24ம் தேதி வரை கோலாகலமாக நடக்கிறது. உலகின் 140 நாடுகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர். இதையொட்டி, ஸ்ரீசத்ய சாய் உயர்கல்வி நிறுவனத்தின் 44வது பட்டமளிப்பு விழா, நாளை மாலை 4 மணியளவில் நடக்கிறது. பிரசாந்தி நிலையத்தில் உள்ள பூர்ணசந்திரா ஆடிட்டோரியத்தில் நடக்கும் இந்த விழா சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. பட்டமளிப்பு விழாவில், துணைவேந்தர் பேராசிரியர் ராகவேந்திர பிரசாத் துவக்க உரை நிகழ்த்த உள்ளார். துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், தலைமை விருந்தினராக பங்கேற்று பட்டமளிப்பு உரை நிகழ்த்த உள்ளார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இந்த விழாவில் உயர்கல்வி நிறுவனங்களின் வேந்தர், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சக்கரவர்த்தி, இளங்கலை, முதுகலை, தொழில்நுட்பம் மற்றும் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளார்.

 
மேலும் சத்ய சாய் 100: தெய்வீக அன்பின் நூற்றாண்டு விழா 2025 செய்திகள் »
temple news
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 100வது பிறந்த நாள் கொண்டாட்டம், நவ., 13ம் தேதி ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா வழங்கிய ஆசி மற்றும் உதவியால் தான், சென்னை மக்களுக்கு இடையூறு ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 100வது பிறந்தநாள் விழா இன்று பிரசாந்தி மந்திரில் பாபாவின் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி, இன்றைய தினம் ஒரு புதிய ஒளியில் நனைகிறது. இன்று பகவான் சத்யசாய்பாபா பிறந்த நாள். பகவான் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: ஸ்ரீ சத்யசாய் உயர்கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக, துணை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar