Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சம்பக சஷ்டி விழா; ஈஸ்வரன் கோயில் ... ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தெக்கூரில் மிளகாய் சாந்து சித்தர் குருபூஜை விழா
எழுத்தின் அளவு:
தெக்கூரில் மிளகாய் சாந்து சித்தர் குருபூஜை விழா

பதிவு செய்த நாள்

27 நவ
2025
04:11

மானாமதுரை; மானாமதுரை பெரியகோட்டை அருகே உள்ள தெக்கூரில் நடைபெற்ற மிளகாய் சாந்து சித்தர் குருபூஜை விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


மானாமதுரை பெரியகோட்டை அருகே உள்ள தெக்கூரில் முத்திருளாண்டி சுவாமிகள் எனப்படும் மிளகாய் சாந்து சித்தர் ஜீவசமாதி உள்ளது.இங்கு சுவாமிகளுக்கு மிளகாயை அரைத்து அபிஷேகம் செய்தால் நீண்ட வருடங்களாக குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளதால் குழந்தை இல்லாத தம்பதிகள் ஏராளமானோர் இங்கு வந்து அபிஷேகம் செய்து குழந்தை பாக்கியம் பெற்று வருகின்றனர். இந்நிலையில் வருடந்தோறும் கார்த்திகை மாதம் குருபூஜை விழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான விழா இன்று நடைபெற்றதை தொடர்ந்து சுவாமிகளுக்கு அதிகாலை பால் பன்னீர் சந்தனம் குங்குமம் இளநீர் திரவியம் நெய் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சுவாமிக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. விழாவில் தெக்கூர் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை மிளகாய் சாந்து சித்தர் தலைமுறையைச் சேர்ந்தவர்களும், தெக்கூர் கிராமத்தினரும் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
கோவை: உக்கடம் பூமி நீளா சமேத கரிவரதராஜ பெருமாள் கோவிலில் உற்சவமூர்த்திகளான விநாயகப் பெருமான், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar