பரமக்குடி; பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 43ம் ஆண்டு லட்சார்ச்சனை விழா நடந்தது. எமனேஸ்வரம் சவுராஷ்ட்ர சபைக்கு பாத்தியமான பெருந்தேவி தாயார், வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு ஏக தின லட்சார்ச்சனை விழா காலை 7:00 மணி தொடங்கி நடந்தது. தொடர்ந்து காலை மற்றும் மாலை என பெருமாளுக்கு துளசி மற்றும் குங்குமத்தால் அர்ச்சனை நடந்தது. பின்னர் இரவு 8:00 மணிக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. சபை நிர்வாகிகள் மற்றும் லட்சார்ச்சனை கமிட்டியினர் பங்கேற்றனர்.