சத்யசாய் சுப்ரபாதம், நகர சங்கீர்த்தனத்துடன் நிகழ்ச்சி துவக்கப்பட்டது. பிரசாந்தி கொடியேற்றுதல், சாய் பஜன் நடத்தி, விஜயலட்சுமி ராஜகோபால், தங்கம் சந்திரசேகர், லலிதா செல்வகுமார், சித்ரா சந்திரசேகர், லோகசாந்தி திருவாசகமணி, கண்ணுசாமி ராஜாமணி திருவிளக்கு சுடர் ஏற்றினர். கன்வீனர்கள் கணேசன், வைரமூர்த்தி வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து காலை 9:30 மணிக்கு தேரோடும் வீதிகள் வழியாக சத்ய சாய்பாபாவின் திருஉருவப்படம் சாய் பஜனையுடன் ஊர்வலமாக கொண்டுவரப் பட்டது. சமுதாய நலன் என்ற தலைப்பில் ஆசுகவி ஆராவமுதன், சாய் அற்புதங்கள் என்ற தலைப்பில் சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாய் முரளி, சாய் அருள் அமுத உரை என்ற தலைப்பில் விழுப்புரம் சத்யசாயி சேவா அமைப்பின் மாவட்ட தலைவர் சரவணன் சிறப்பு சொற்பொழிவாற்றினர். பகல் 12:30 மணிக்கு சிறப்பு அழைப்பாளர்கள் கலந்துகொண்ட ராமநாதன், தியாகதுருகம் சரவணன் மருத்துவமனை டாக்டர் கவிதா சரவணன் ஆகியோர் வேஷ்டி சட்டை, சேலை வழங்கினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஏமப்பேர், கள்ளக்குறிச்சி வரதப்பனுார், சிறுவங்கூர் சத்யசாயி சேவா அமைப்பினர் செய்திருந்தனர். சிறுவங்கூர் வேலு நன்றி கூறினார்.