சபரிமலையில் பக்தர்களுக்கு தினமும் 5 லட்சம் பிஸ்கட் வழங்கல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12டிச 2025 11:12
சபரிமலை: சபரிமலையில் நடப்பு மண்டல சீசனில் தொடக்கம் முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. சில நாட்களில் மர கூட்டம் முதல் சன்னிதானம் வரை இரண்டு கி.மீ. துாரத்துக்கு கியூ நீள்வதால் பக்தர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இவர்களுக்கு ஆறுதலாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் பிஸ்கட் மற்றும் மூலிகை குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த பாதையில் மொத்தம் 75 இடங்களில் இவை விநியோகிக்கப்படுவதாகவும் தினமும் 5 லட்சம் பிஸ்கட்டுகளும், 20 ஆயிரம் லிட்டர் மூலிகை குடிநீரும் வழங்கப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். சுக்கு, பதிமுகம், ராமிச்சம் போன்ற மூலிகைகள் போட்டு தண்ணீர் கொதிக்க வைத்து ஆறிய பின்னர் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. துாரமாக உள்ள இடங்களில் குழாய் மூலம் இந்த தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.