திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் வரும் 15ல் தெப்ப திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13டிச 2025 11:12
திருவாலங்காடு: திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் குளத்தில் தெப்ப திருவிழா நாளை மறுதினம் நடைபெற உள்ளது. திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் கார்த்திகை மா தம் சுவாதி நட்சத்திரத்தில் உற்சவர் பெருமான் தீர்த்த குளத்தில் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். சுவாதி நட்சத்திரத்தை ஒட்டி நாளை மறுதினம் மாலை 6:00 மணிக்கு தெ ப்பத்திருவிழா நடைபெற உள்ளது. விழாவையொட்டி திருக்குளத்திற்கு வர்ணம் பூசப்பட்டு தெப்பம் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.