மார்கழி மாத பிறப்பு : பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16டிச 2025 11:12
போடி; மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் தங்க கவச அலங்காரத்தில் பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் தரிசனம் பெற்றனர். சுவாமி அலங்காரத்தினை கார்த்திக் பட்டாச்சாரியார் செய்திருந்தார்.
* போடி சுப்பிரமணியர் கோயிலில் முருகனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. போடி அருகே சிலமலை சீனிவாசப் பெருமாள் கோயில், பிச்சாங்கரை மலைப்பகுதியில் அமைந்துள்ள மேலச்சொக்கநாதர் கோயில், போடி பரமசிவன் கோயில், கொண்டரங்கி மல்லையா சுவாமி கோயில், திருமலாபுரம் முத்து மாரியம்மன் கோயில், வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயிலில் உள்ள சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.