நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதத்தை உணர்த்துவது அகல் விளக்கு. வட்டவடிவமான இது மண்ணால்(நிலம்) செய்யப்பட்டது. அதில் விடும் எண்ணெயோ நமக்க உணர்த்துவது நீர் தத்துவம். விளக்கின் சுடர் நெருப்புத் தத்துவம். தீபம் நன்றாக எரிய தேவைப்படுவது காற்று. அகலுக்கு மேலே உள்ளது ஆகாயம். எனவே பஞ்சபூதத்தை படைத்த கடவுளுக்கு அகல் விளக்கை ஏற்றுகிறோம்.