திருவண்ணாமலை ஜெய வீர பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19டிச 2025 12:12
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஆரணி சாலையில் உள்ள ஜெய வீர பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், அனுமன் ஜெயந்தி இன்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, சந்தன காப்பு அலங்காரம் மற்றும் வெண்பட்டு அணிந்து வெள்ளி கவசஅலங்காரத்தில், பஞ்சமுக ஜெயவீர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.