ராமநாதபுரம்: மலைப்பகுதிகளில் மட்டுமே வளரும் ருத்ராட்ச மரம், ராமநாதபுரம் மாவட்டத்தில் வளர்ந்துள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் உத்தரகோசமங்கை தெய்வசிலை நல்லூரிலும், ராமநாதபுரம் அருகே திருவெற்றிய கழுகூரணியிலும் தற்போது உத்திராட்ச மரங்கள் வளர்ந்துள்ளன.கழுகூரணியை சேர்ந்த ஒருவர் கூறும்போது, ""பல ஆண்டுகளுக்கு முன் பக்தர் ஒருவர் இங்கு சித்திவிநாயகர் செந்திலாண்டவர் கோயிலில் ருத்ராட்ச மரத்தை நட்டார். குளிர்காலத்தில் பூக்கள் பூத்து, பங்குனி மாதத்தில் காய்க்கும். ஆனால் இங்கு பூத்து பிஞ்சாகி, பின் காய்ந்துவிடுகிறது. இந்த தட்பவெப்ப சூழலில் ருத்ராட்சம் முழுமையாக வளரவில்லை. இருப்பினும் கோயிலில் வளரும் இந்த ருத்ராட்ச மரத்திற்கு பூஜை செய்து வணங்கி வருகிறோம். ராமேஸ்வரம் வரும் பக்தர்கள் இங்கு வந்து மரத்தை வணங்கி செல்கின்றனர், என்றார்.