Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிம்மம் : ஆங்கில புத்தாண்டுப் ... துலாம் : ஆங்கில புத்தாண்டுப் பலன்கள் 2026 துலாம் : ஆங்கில புத்தாண்டுப் பலன்கள் ...
முதல் பக்கம் » 2026 வருட ராசி பலன்
கன்னி : ஆங்கில புத்தாண்டுப் பலன்கள் 2026
எழுத்தின் அளவு:
கன்னி : ஆங்கில புத்தாண்டுப் பலன்கள் 2026

பதிவு செய்த நாள்

27 டிச
2025
03:12

உத்திரம்: சவாலே சமாளி


ஆத்மக்காரகனான சூரியன் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1 ம் பாதமான சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனே ராசிநாதனாகவும், 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும் உள்ளனர்.


2026 ம் ஆண்டில் உத்திரம் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு செயல்களில் தடை, உடல் பாதிப்பு, வியாபாரம், தொழிலில் நெருக்கடி, வேலையில் பிரச்னை, முன்னேற்றத்தில் தடை ஏற்படும். அதே சமயத்தில் எதிர்வரும் சவால்களை சமாளிக்கும் சக்தியும் உண்டாகும். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு  எடுத்த முயற்சிகள் வெற்றியாகும். நினைத்தது நடக்கும். அந்தஸ்து உயரும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். குடும்பத்தில் சுபிட்சம் நிலவும். பணவரவு அதிகரிக்கும்.


சனி சஞ்சாரம் 

உத்திரம் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6 வரை கண்டச் சனியாகவும் அதன்பின் அஷ்டமச் சனியாகவும் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, கணவன் மனைவிக்குள் சங்கடம், உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். பெற்றோரின் உடல்நிலையில் பாதிப்பு, உங்கள் செல்வாக்கிற்கு சோதனை ஏற்படும். தொழில், வேலையில் நெருக்கடி உண்டாகும். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஆண்டின் முற்பகுதியில் எடுக்கும் வேலைகளில் வெற்றியையும், உடல் ஆரோக்யத்தையும், இழுபறியாக இருந்த வேலைகளை முடிக்கும் சக்தியையும் சனி வழங்குவார். அதன்பின் உடல்நிலையில் ஒரு நேரம் இருப்பதுபோல் மறுநேரம் இருக்க முடியாத அளவிலும், கணவன் மனைவிக்குள் பிரச்னையையும், புதிய நட்புகளால் களங்கத்தையும் ஏற்படுத்துவார்.


ராகு, கேது சஞ்சாரம் 

நவ.13 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும், அதன்பின் ராகு மகரத்திலும், கேது கடகத்திலும் சஞ்சரிப்பதால், 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நவ.13 வரை அனைத்திலும் போராட்டம் இருக்கும். குடும்பத்தில் சங்கடம், உடல் பாதிப்பு, நட்பால் பண இழப்பு, அவமானம், தொழிலில் தடை ஏற்படும். அதன்பின் அனைத்திலும் மாற்றம் ஏற்படும். முன்னேற்றம் உண்டாகும். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ. 13 வரை யோக காலமாக இருக்கும். எடுத்த வேலைகள் முடியும். எதிரிகள் உங்களை நெருங்க மாட்டார்கள். வழக்கு விவகாரம் சாதகமாகும். வேலையில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். அதன்பின் பணவரவு அதிகரிக்கும். பொருளாதாரம் உயரும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும்


குரு சஞ்சாரம்

 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் வரவு அதிகரிக்கும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். குழந்தை பாக்கியம், பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். தம்பதிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். ஆண்டின் மத்தியில் அலைச்சல் செலவு  ஏற்பட்டாலும் வசதி வாய்ப்பு அதிகரிக்கும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். ஆண்டின் கடைசி பகுதியில் திருமணம், குழந்தை, வீடு என்ற கனவு நனவாகும். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஆண்டின் முற்பகுதியில் தொழிலில் தடை, வேலையில் பிரச்னை ஏற்பட்டாலும் மே 26 முதல் நிலை மாறும். பணவரவு அதிகரிக்கும். தடைபட்ட வேலை நடந்தேறும். படிப்பு, வேலை, திருமணம், வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். ஆண்டின் கடைசியில் செலவு அதிகரித்தாலும் மகிழ்ச்சியான நிலை இருக்கும். 


சூரிய சஞ்சாரம் 

உத்திரம் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஜன. 15 – பிப். 12, மே. 15 – ஜூலை. 16 காலங்களிலும், அக். 18 – நவ.16 காலத்திலும், 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, பிப்.13 – மார்ச்14,  மற்றும் ஜூன்15 – ஆக.17 காலங்களிலும், நவ.17 – டிச.15 காலத்திலும் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் சூரியனால்  வெற்றிநடை போடுவீர்கள். முயற்சி வெற்றி பெறும்.  வேலை வாய்ப்பிற்கும் சுய தொழிலுக்கும் வழி உண்டாகும். பட்டம், பதவி, அந்தஸ்து என உயர்வு காண்பீர்கள். வழக்கு விவகாரம் சாதகமாகும். பணியில் எதிர்பார்த்த இடமாற்றம்,  பதவி உயர்வு கிடைக்கும். 


பொதுப்பலன் 

குடும்பம், தொழில், வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். வாழ்வில் புதிய பாதை தெரியும். சமூகத்தில் மதிப்பு அதிகரிக்கும். எதையும் துணிச்சலாக செய்யும் அளவிற்கு செல்வாக்கு உயரும்.   எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெறும். திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். 


தொழில்  

உழைப்பால் உயரும் உங்களுக்கு  தொழில் மீது அக்கறை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சியில் கவனமாக இருப்பீர்கள். அரசு ஒப்பந்தம், ஷேர் மார்க்கெட், எக்ஸ்போர்ட், டிராவல்ஸ், ஆட்டோ மொபைல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், பப்ளிகேஷன், விவசாயம், வாகன விற்பனை, சின்னத்திரை, சினிமா, யூடியூப் தொழில்கள் முன்னேற்றம் பெறும். 


பணியாளர்கள்  

தற்காலிகப் பணியாளர்களுக்கு பணி நிரந்தரமாகும். நீண்ட நாளாக எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். தனியார் நிறுவன பணியாளர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். நிர்வாகத்தின் ஆதரவு உண்டாகும்.


பெண்கள் 

மனக் கவலை தீரும்.  சுய தொழில் ஆதாயம் தரும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டாகும். திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும். குழந்தை பாக்கியம் உண்டாகும். பணியாளர்களுக்கு விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். கணவரின் அன்பு அதிகரிக்கும். 


கல்வி 

படிப்பில் அக்கறை கூடும். ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்பீர்கள். தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். மருத்துவம், பொறியியல் படிக்கும் கனவு நனவாகும்.


உடல்நிலை 

நோயில்  இருந்து விடுபடுவீர்கள். ஆச்சரியப்படும் வகையில் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்யம் சீராகும். மருத்துவச் செலவு குறையும்.


குடும்பம் 

செல்வாக்குடன் வாழும் நிலை உருவாகும். திட்டமிட்டு செயல்பட்டு வீடு, வாகனம் வாங்குவீர்கள். சிலர் தங்கம், நிலம் மீது முதலீடு செய்வீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும். தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும்.


பரிகாரம் : குலதெய்வத்திற்கு பொங்கலிட்டு வழிபட சங்கடம் தீரும். நன்மை உண்டாகும்.


அஸ்தம்: வெற்றி நிச்சயம்


மனக்காரகனான சந்திரன், வித்யாகாரகனான புதன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, 2026 நினைத்ததை சாதிக்கும் ஆண்டாக இருக்கும். மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும் என்பது போல இந்த ஆண்டில் எடுக்கும் முயற்சி ஒவ்வொன்றும் வெற்றியாகும். சொத்து, சுகம், ஆடை ஆபரணம், பட்டம் பதவி, வாகனம் என உங்கள் வாழ்வு வளமாகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். உடல்நிலை சீராகும். அந்தஸ்து உயரும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். குடும்பத்தில் சுபிட்சம் நிலவும். 


சனி சஞ்சாரம் 

ஆண்டின் தொடக்கத்தில் சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி உங்கள் செல்வாக்கை உயர்த்துவார். வியாபாரம், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்ப்பு, போட்டி, பிரச்னை என்ற நிலை மாறும்.  எடுக்கும் வேலைகளில் லாபம் கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலைகளை முடிக்கும் சக்தி பிறக்கும்.  மார்ச் 6 முதல் கண்டச்சனியாக சஞ்சரித்து பலன்களை வழங்க  இருப்பதால் நீங்கள் பயப்பட வேண்டியதில்லை. மார்ச் 12 – ஏப். 11 காலத்தில் அஸ்தங்கம் அடைவதாலும், ஜூலை 15 – நவ. 30 வரை வக்ரம் அடைவதாலும், மே 26 முதல் சனிக்கு குருவின் பார்வை கிடைப்பதாலும் ஏழாமிட சனியின் பாதிப்பு இந்த ஆண்டில் ஏற்படாது.


ராகு, கேது சஞ்சாரம் 

நவ.13 வரை ராகு 6 ம் இடத்திலும், கேது 12 ம் இடத்திலும் சஞ்சரிப்பதால் நவ.13 வரை எடுத்த காரியம் யாவும் வெற்றியாகும். நினைத்த வேலை  நடந்தேறும். எதிர்ப்பு, நோய், வழக்கு என்பதெல்லாம் உங்களை விட்டு விலகக்கூடிய யோக காலமாக இருக்கும். அரசியல், அதிகாரம், வேலை என அனைத்திலும் உங்கள் கை ஓங்கும். நவ.13 முதல் கேது லாப ஸ்தானம் செல்வதால் வீண் செலவு குறையும். வரவேண்டிய பணம் வரும். விஐபி வரிசையில் இடம் கிடைக்கும். முடங்கிய தொழில் முன்னேற்றமடையும். பொருளாதாரம் உயரும்.


குரு சஞ்சாரம்

மார்ச் 16 வரை மிதுனத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் குரு, மார்ச் 17 முதல் வக்ர நிவர்த்தியாகிறார், தொடர்ந்து மே 26 முதல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிப்பவர், அக்.20 முதல் சிம்மத்திற்கு அதிசாரமாக  சஞ்சரிப்பதால், மே26 வரை பார்த்து வரும் வேலையில் கவனமாக இருக்க வேண்டும். தொழிலில் அதிகபட்ச அக்கறை கொள்ள வேண்டும். மே 26 முதல் லாப குருவாக சஞ்சரிப்பதால் வரவு அதிகரிக்கும். தடைபட்ட வேலைகளை குரு முடிக்க வைப்பார். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகன கனவு நனவாகும். அக். 20 முதல் விரய குருவால் செலவு அதிகரித்தாலும், சந்தோஷம் உண்டாகும்.  மகிழ்ச்சி கூடும். செல்வாக்கு உயரும். 


சூரிய சஞ்சாரம்

பிப். 13 – மார்ச் 14,  ஜூன் 15 – ஆக.17 காலங்களிலும், நவ.17 – டிச.15 காலத்திலும் சூரியன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால், உங்கள் முன்னேற்றத்தில் ஏற்பட்ட இடையூறு விலகும். எடுக்கும் வேலைகள்  லாபமாகும். உடல்நிலை சீராகும். வழக்கு விவகாரத்தில் வெற்றி கிடைக்கும்.  எதிர்பார்த்த வேலை கிடைக்கும். சுய தொழிலில் ஈடுபட வழி பிறக்கும். பட்டம், பதவி, அந்தஸ்து என உயர்வு உண்டாகும். பணியில் எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.


பொதுப்பலன் 

2026 ம் ஆண்டில் உங்களின் நிலை உயரும். நெருக்கடி விலகும். நீண்ட நாள் கனவு நனவாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். தடைபட்ட வேலைகள் முடிவிற்கு வரும். இடம், வீடு, வாகனம், ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். மனதில் நிம்மதி உண்டாகும்.


தொழில் 

தொழில் தடையின்றி நடக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிரி தொல்லை விலகும். ஆதாயம் அதிகரிக்கும். அரசு வழியில் கிடைக்க வேண்டிய அனுமதி கிடைக்கும், ஷேர் மார்க்கெட், நிதிநிறுவனம், மினரல் வாட்டர், டிரான்ஸ்போர்ட், எக்ஸ்போர்ட், ஜவுளி, விவசாயம், பதிப்பகம், செய்தித்தாள், காலண்டர், நோட்டு புத்தகம் தயாரிப்பு, தனியார் பள்ளிகள், யூடியூப், சின்னத்திரை, சினிமா தொழில்கள் முன்னேற்றம் பெறும். வழக்கறிஞர், பத்திரம் எழுதுவோர், ஆசிரியர் லாபம் அடைவர்.


பணியாளர்கள் 

இட மாற்றத்தில் தடை, பதவி உயர்வில் சிக்கல் என்றிருந்த நிலை மாறும். வழக்குகள் சாதகமாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.  தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். தனியார் நிறுவனத்தில் பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.


பெண்கள் 

குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். உறவுகளுடன் ஏற்பட்ட சச்சரவு முடிவிற்கு வரும். உடல் பாதிப்பு நீங்கும். திருமணம், குழந்தை பாக்கியம் உண்டாகும். எதிர்பார்த்த வேலை கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு உங்கள் செயல்களுக்கு வலு சேர்க்கும். வீடு, வாகனம், பொன் பொருள் சேரும். சுய தொழில் ஆதாயம் தரும். பணியாளர்களுக்கு தடைபட்டு வந்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.


கல்வி 

 ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்றால் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர் கல்வி கனவு நனவாகும். மருத்துவம், பொறியியல், சட்டம், கல்வியியல், அக்கவுண்டன்சி மாணவர்களின் எதிர்பார்ப்பு விரைவில் நிறைவேறும். 


உடல்நிலை 

உடல் பாதிப்பு இருந்த இடம் தெரியாமல் போகும். உற்சாகமாக செயல்படுவீர்கள். 6 ம் இட ராகுவால் ஆச்சரியப்படும் வகையில் ஆரோக்கியம் சீராகும். அடிக்கடி டாக்டரை பார்த்து வந்த நிலை மாறும்.


குடும்பம் 

நீண்ட நாளாக குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். வேலையின் காரணமாக பிரிந்த தம்பதியர் மீண்டும் சேர்வர்.  கருத்து வேறுபாட்டால் விலகியவர்கள் மீண்டும் இணைவர். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். பிள்ளைகளின் வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். சுப நிகழ்ச்சி நடந்தேறும். புதிய இடம், வீடு, வாகனம், ஆடை, ஆபரணம் என கனவு நனவாகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.


பரிகாரம் : திருவெண்காடு சிவனை வழிபட நன்மை உண்டாகும். வேண்டுதல் நிறைவேறும்.


சித்திரை: நல்ல நேரம் வந்தாச்சு


தைரிய வீரிய காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்தாலும், 1,2 ம் பாதங்களான கன்னியில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும், 3,4 ம் பாதங்களான துலாத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும் உள்ளனர்.


பிறக்கும் 2026 ஆண்டு, 1,2 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு யோகமாக இருக்கும். செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கும். நல்ல காலம் பிறக்காதா என காத்திருந்தவர்களுக்கு நினைத்தது நடந்தேறும். முயற்சிகள் வெற்றியாகும். வாழ்க்கை வளமாகும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். 3,4 ம் பாதத்தினருக்கு பாக்ய குரு, லாப கேது, சத்ரு ஜெய ஸ்தான சனி என நன்மையை வாரி வழங்குவர். கடந்த ஆண்டில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். போராட்ட நிலை மாறும். பொன்னும் பொருளும் சேரும். புகழும் பெருமையும் உண்டாகும்.


சனி சஞ்சாரம் 

சித்திரை 1,2 ம் பாதங்களில் பிறந்தவருக்கு ஆண்டின் தொடக்கத்தில் சத்ரு ஜெய சனியால் செல்வாக்கு உயரும். அனைத்திலும் முன்னேற்றம் உண்டாகும். துணிச்சலுடன் செயல்படுவீர்கள்.  உடல் நிலை சீராகும். வழக்கில் வெற்றி கிடைக்கும். மார்ச் 6 முதல் கண்டச்சனியாக சஞ்சரித்தாலும், அஸ்தமனம், வக்கிரம், குருப்பார்வை என்பனவற்றால் சனியின் பாதிப்பு உங்களை நெருங்காது. 3,4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6 வரை பஞ்சம ஸ்தான சனியால் குடும்பத்தில் நெருக்கடி, உறவுடன் பகை, தம்பதி இடையே கருத்து வேறுபாடு, பிள்ளைகளால் சங்கடம் ஏற்படும். அதன்பின் வருமானத்திற்கு வழியமைப்பார். வியாபாரம், தொழிலில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். 


ராகு, கேது சஞ்சாரம் 

நவ.12 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும், நவ.13 முதல் ராகு மகரத்திலும், கேது  கடகத்திலும் சஞ்சரிப்பதால் 1,2 ம் பாதத்தினருக்கு நவ.12 வரை ராகுவால் வெற்றி சேரும். நினைத்தது நிறைவேறும்.  நோய், வழக்கு பாதிப்பு இருக்காது. நவ. 13 முதல் லாப கேதுவால் வருமானம் உயரும். செல்வாக்கு கூடும். முடங்கிய தொழில் முன்னேற்றம் பெறும். 3,4 ம் பாதத்தில் பிறந்தவர்கள் நவ. 12 வரை பணப்புழக்கம் காண்பர்.  நெருக்கடி வந்தாலும் அதை சமாளிக்கும் சக்தி உண்டாகும். நவ. 13 முதல் 4ம் இட ராகுவும், 10ம் இட கேதுவும் உழைப்பை அதிகரிப்பர். வேலை, தொழிலில் போராட்டமான நிலை உண்டாகும். 


குரு சஞ்சாரம்

1,2 ம் பாதத்தில் பிறந்தவர்கள் ஆண்டின் முற்பகுதியில் கவனமாக செயல்படுவது அவசியம். வேலை, தொழிலில் நெருக்கடி உண்டாகும். மே 26 முதல் பணவரவு அதிகரிக்கும். தடைபட்ட வேலை நடந்தேறும். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். அக்.20 முதல் ஒரு பக்கம் செலவும், மறுபக்கம் சந்தோஷமும் இருக்கும். 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஆண்டின் முற்பகுதி யோகமாக இருக்கும். செல்வம், செல்வாக்கு, அந்தஸ்து, பட்டம், பதவி, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் என்ற கனவுகள் நனவாகும். மே 26 முதல் அனைத்திலும் எச்சரிக்கை அவசியம். அக். 20 முதல் மீண்டும் உங்கள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். 


சூரிய சஞ்சாரம் 

சித்திரை 1,2 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு பிப்.13 –  மார்ச் 14, ஜூன் 15 –  ஆக. 17 காலங்களிலும், நவ. 17 –  டிச. 15 காலத்திலும், 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜன. 1 –  ஜன. 14, மார்ச் 15 –  ஏப். 13 காலங்களிலும், ஜூலை 17 –  செப்.17, டிச.16 –  31 காலங்களிலும் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் சூரியன் முயற்சிகளை வெற்றியாக்குவார். முன்னேற்றம் தருவார்.  செல்வாக்குடன் வாழ வைப்பார்.


பொதுப்பலன்  

கேள்விக்குறியாக இருந்த நீங்கள் பிறர் ஆச்சரியப்படும் அளவிற்கு உயர்வீர்கள். பணம், புகழ், அந்தஸ்து, செல்வாக்கு, ஆரோக்கியம் என அனைத்தும் கிடைக்கும். வேலை, தொழிலில் ஏற்பட்ட பிரச்னை விலகும். நீண்ட நாள் கனவு நனவாகும்.


தொழில்  

தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய ஒப்பந்தம் மூலம் ஆதாயம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவோருக்கு அரசு வழியில் அனுமதி கிடைக்கும், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ்,  கெமிக்கல், மெடிக்கல், உணவகம், விவசாயம், ரசாயனப் பொருட்கள், குடிநீர், பப்ளிகேஷன், ஷேர் மார்க்கெட், நிதி நிறுவனம், எக்ஸ்போர்ட், ஜவுளி, காலண்டர், நோட்டு புத்தகம் தயாரிப்பு, பள்ளிகள், யூடியூப், சின்னத்திரை, சினிமா தொழில்கள் முன்னேற்றம் அடையும், காவல் துறை, பாதுகாப்பு படை, மருத்துவத்துறையினர் லாபம் அடைவர்.


பணியாளர்கள் 

எதிர்பார்த்த இடமாற்றம், நியாயமாக வர வேண்டிய பதவி உயர்வும் கிடைக்காமல் அவதிக்கு ஆளான நிலை மாறும். தனியார் நிறுவன பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். சக பணியாளர்களின் உதவி கிடைக்கும். 


பெண்கள் 

உடல் பாதிப்பு மறையும். குடும்பத்தில் மதிப்பு அதிகரிக்கும். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் என கனவு நனவாகும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி மறையும்.  கணவருடன் இணக்கம் அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். சுய தொழில் ஆதாயம் தரும்


கல்வி 

பொழுது போக்கை விட்டு விட்டு படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். ஆசிரியர்கள் ஆலோசனையை பின்பற்றினால்  எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர் கல்வி கனவு நனவாகும். சிலர் வெளி மாநிலம், வெளிநாட்டில் படிக்கச் செல்வர். 


உடல்நிலை 

தொற்று நோய், பரம்பரை நோய் என்று மருத்துவ மனைக்கு செல்லும் நிலை மாறும். உடல்நிலை சீராகும். மருத்துவச் செலவு குறையும்.


குடும்பம் 

நீண்டநாள் கனவு நனவாகும். வீடு, மனை, வாகனம், ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள்.  சிலர் சொந்த வீட்டில் குடியேறுவர். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சேமிப்பு உயரும். தம்பதிக்குள் இருந்த கருத்து வேறுபாடு விலகும். வேண்டுதலை  நிறைவேற்ற குடும்பத்தினருடன் கோயில்களுக்கு செல்வீர்கள்.  உறவினர் மத்தியில் கவுரவமாக வாழ்வீ்ரகள். 


பரிகாரம் : பைரவரை அஷ்டமியன்று வழிபட்டால் சிக்கல் தீரும்; நன்மை உண்டாகும்.

 
மேலும் 2026 வருட ராசி பலன் »
temple news
அசுவினி: வெற்றி மீது வெற்றிதைரிய காரகன் செவ்வாய், ஞான மோட்சக்காரகன் கேதுவின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
அசுவினி; யோக காலம்செவ்வாய், கேதுவின் அம்சம் கொண்ட உங்களுக்கு பிறக்கும் 2025 ஆங்கில வருடம் யோகமான வருடமாக ... மேலும்
 
temple news
அசுவினி; நல்லநேரம் ஆரம்பம்செவ்வாய், பகவான் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு 2024 ஆங்கில வருடத்தில் ... மேலும்
 
temple news
அசுவினி: தன்னலம் பாராமல் பிறருக்கு உதவும் அசுவினி நட்சத்திர அன்பர்களே இந்த ஆண்டு நீங்கள் ... மேலும்
 
temple news
கார்த்திகை: நல்லகாலம் வந்தாச்சுஆத்ம காரகன் சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar