Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துலாம் : ஆங்கில புத்தாண்டுப் பலன்கள் ... தனுசு : ஆங்கில புத்தாண்டுப் பலன்கள் 2026 தனுசு : ஆங்கில புத்தாண்டுப் பலன்கள் 2026
முதல் பக்கம் » 2026 வருட ராசி பலன்
விருச்சிகம் : ஆங்கில புத்தாண்டுப் பலன்கள் 2026
எழுத்தின் அளவு:
விருச்சிகம் : ஆங்கில புத்தாண்டுப் பலன்கள் 2026

பதிவு செய்த நாள்

27 டிச
2025
03:12

விசாகம்: குறை தீர்ப்பார் குரு


ஞானக்காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1,2,3 ம் பாதங்களான துலாத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும், 4ம் பாதமான விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் ராசி நாதனாகவும் உள்ளனர்.


 2026 ம் ஆண்டு 1,2,3 ம் பாதங்களுக்கு மேன்மையான ஆண்டாக இருக்கும். கனவாக இருந்ததெல்லாம் நனவாகும். தடைபட்டு வேலைகள் நடந்தேறும். பொன்னும் பொருளும் சேரும்.  வழக்குகள் முடிவுக்கு வரும். 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு போராட்ட நிலை மாறும். பெரியோரின் உதவியும் தெய்வ அருளும் கிடைக்கும். மனதை வாட்டிய பிரச்னைகள் முடிவிற்கு வரும். ஆரோக்கியத்துடன் நிம்மதியாக வாழும் நிலை உண்டாகும்.


சனி சஞ்சாரம் 

விசாகம் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6 வரை குடும்பத்தில் நெருக்கடி நிலை இருக்கும். எடுக்கும் வேலைகளை முடிக்க முடியாமல் இழுபறியாகும்.  உறவுகளுடன் இணக்கம் இல்லாமல் போகும். கணவன், மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு தோன்றும். பிள்ளைகளால் நெருக்கடி அதிகரிக்கும். மார்ச் 6 முதல் மீனத்தில் உள்ள சனி உங்கள் நிலையை உயர்த்துவார். செல்வாக்கு உயரும். எதிர்ப்பு, போட்டி, பகையை இருந்த இடம் தெரியாமல் செய்வார். வசதி வாய்ப்பு பெருகும். 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6 வரை அர்த்தாஷ்டமச் சனியாக சஞ்சரித்து நெருக்கடியை தந்தாலும், அதன்பின் மீன ராசியில் சஞ்சரிக்க இருப்பதால் அர்த்தாஷ்டமச்சனி உங்களை விட்டு விலகும். சனியின் பார்வையும் உங்கள் ராசியை விட்டு விலகுவதால் கடந்த இரண்டரை ஆண்டு காலம் நீங்கள் அடைந்த அவமானம், சங்கடம், மன உளைச்சல் மறையும்.  வருமானம் உயரும். பண நெருக்கடி நீங்கும்.


ராகு, கேது சஞ்சாரம் 

நவ.12 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும், நவ.13 முதல் ராகு மகரத்திலும், கேது கடகத்திலும் சஞ்சரிப்பதால் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ. 12 வரை லாப கேதுவால் பணவரவு அதிகரிக்கும். அசையா சொத்து சேரும். அதிர்ஷ்ட வாய்ப்பு வரும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். எடுக்கும் வேலைகள் லாபமாகும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நவ.13 முதல் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு  கை விட்ட வேலைகளை முடித்து வைப்பார். முயற்சியை வெற்றியாக்குவார். தைரியம், தன்னம்பிக்கை கூடும். சூழ்நிலைகளால் மந்த நிலைக்கு ஆளானவரையும் சுறுசுறுப்பாக செயல்பட வைப்பார்.


குரு சஞ்சாரம்

மார்ச் 16 வரை மிதுனத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் குரு, மார்ச் 17 முதல் வக்ர நிவர்த்தியாகிறார், தொடர்ந்து மே 26 முதல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிப்பவர், அக்.20 முதல் சிம்மத்திற்கு அதிசாரமாக  சஞ்சரிப்பதால், 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 25 வரை நினைப்பது நடந்தேறும். செல்வம், செல்வாக்கு அதிகரிக்கும். திருமணம், குழந்தை பாக்கியம் என்ற கனவு நனவாகும். மே 26 முதல் வேலை, தொழிலில் கூடுதல் கவனம் தேவைப்படும். ஆனால் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். சந்தோஷம், ஆரோக்கியம் உண்டாகும். அக்.20 முதல் வரவேண்டிய பணம் வரும். பொருளாதார நிலை உயரும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். 


சூரிய சஞ்சாரம் 

விசாகம் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜன.1 – ஜன. 14, மார்ச் 15 – ஏப். 13 காலங்களிலும், ஜூலை. 17 – செப். 17, டிச. 16 – 31 காலங்களிலும், 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஜன. 15 – பிப். 12, ஏப். 14 – மே 14 காலங்களிலும், ஆக. 18 – அக். 17 காலத்திலும் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் சூரியனால் நடக்காத வேலையும் நடக்கும்.  கிடைக்காத வாய்ப்பும் கிடைக்கும். உங்கள் நிலையை உயர வைப்பார். பட்டம், பதவி, பொன், பொருள், செல்வாக்கு காண வைப்பார்.


பொதுப்பலன்  

2026 ம் ஆண்டில் உங்களின் திறமை வெளிப்படும். முயற்சி வெற்றி தரும். தடைப்பட்ட வேலை நடந்தேறும். உங்களுக்குரிய மரியாதை கிடைக்கும். படிப்பு, வேலை, திருமணம், தொழில் என எதிர்பார்ப்பு நிறைவேறும். பொன்னும் பொருளும் சேரும். சேமிப்பு உயரும்.


தொழில்  

தொழில் காரகன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். புதிய தொழில் தொடங்க முயற்சிப்பவர்களுக்கு அதற்குரிய வழி பிறக்கும். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கமிஷன் வியாபாரம், ரசாயனம், மருத்துவம், ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிப்பு விற்பனை, இன்ஜினியரிங், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், விவசாயம், ஓட்டல், திருமண மண்டபம், விடுதி, டிராவல் ஏஜன்சி, பில்டிங் டிசைனிங், டெக்கரேஷன், ஜவுளி, ஜூவல்லரி, கால்நடை வளர்ப்பு, அழகு சாதனப்பொருட்கள் தயாரிப்பு, விற்பனை மூலம் லாபம் அதிகரிக்கும். 


பணியாளர்கள் 

வேலையின் மீதிருந்த பயம் போகும். உங்கள் திறமையை நிர்வாகம் தெரிந்து சலுகை, சம்பள உயர்வை வழங்கும். சிலருக்கு தற்போது உள்ள வேலையை விட நல்ல இடத்தில் எதிர்பார்த்த சம்பளத்துடன் வேலை கிடைக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.


பெண்கள் 

குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். பொன் பொருளை விற்று செலவுகளை சமாளித்து வந்த நிலை மாறும். ஆடை ஆபரணம், நவீன பொருட்கள் வாங்குவீர்கள். உடல் பாதிப்பு விலகும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்கள் ஏக்கம் தீரும். கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு டைவர்ஸ் வரை சென்றவர்களின் மனம் மாறும்.  தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும். ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வீர்கள்.


கல்வி 

படிப்பில் இருந்த மந்த நிலை மாறும். பொதுத்தேர்வு, போட்டித் தேர்வில் அக்கறை அதிகரிக்கும். உங்களை வருத்திக் கொண்டு தேர்வில் கவனம் செலுத்துவீர்கள். ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களை ஏற்பது நன்மை தரும். 


உடல்நிலை 

நோயால் அவதிப்பட்ட நிலை மாறும். பரம்பரை, தொற்று நோய்களுக்கு மாற்று சிகிச்சையில் ஈடுபடுவீர்கள்.  மருத்துவச்செலவு குறையும். உடல்நிலை மேம்படும்.


குடும்பம் 

குடும்பத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும். வீடு, மனை, வாகனம் வாங்கும் அளவிற்கு கையில் பணம் புரளும். பிள்ளைகளின் மேற்படிப்பு, திருமணம் என எதிர்பார்ப்பு நிறைவேறும்.  உறவுகள் மத்தியில் கவுரவம் உயரும். குடும்பத்தில் நிம்மதி பெருகும்.  


பரிகாரம் : கோமதி அம்மனை வழிபட்டால் குறை தீரும். நன்மை நடக்கும்.


அனுஷம்: முயற்சி வெற்றி தரும்


தைரிய வீரிய காரகனான செவ்வாய், கர்மக் காரகனான சனி அம்சத்தில் பிறந்த உங்களுக்கு,  2026 ம் ஆண்டு சங்கடம் விலகி நன்மை காணும் ஆண்டாக இருக்கும். நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்கள் கரைக்கு திரும்பியது போல நிம்மதி காண்பீர்கள். உடல்நிலை, மனநிலை சீராகும். பொருளாதாரம் உயரும். வியாபாரம், தொழில் விருத்தியாகும், குடும்பத்தில் சுபிட்சம் நிலவும்.  


சனி சஞ்சாரம் 

மார்ச் 6 வரை அர்த்தாஷ்டமச்சனியால் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் கடைசி நேரத்தில் இழுபறியாகும். ஏதாவது ஒரு நெருக்கடி இருந்து கொண்டே இருக்கும். மார்ச் 6 முதல் உங்கள் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியால் அர்த்தாஷ்டமச்சனி உங்களை விட்டு விலகுவதுடன், சனியின் பார்வையும் உங்கள் ராசியை விட்டு விலகுவதால் கடந்த இரண்டரை ஆண்டாக இருந்த அவமானம், சங்கடம், மன உளைச்சல் யாவும் விலகும். எடுக்கும் முயற்சி வெற்றி பெறும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். வருமானம் உயரும். குடும்பத்தில் நெருக்கடி நீங்கும்.


ராகு, கேது சஞ்சாரம் 

நவ. 12 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும், நவ.13 முதல் ராகு மகரத்திலும், கேது கடகத்திலும் சஞ்சரிப்பதால், நவ.12 வரை உழைப்பு அதிகரிக்கும். தாய்வழி உறவுகளுடன் இடைவெளி ஏற்படும். தாயாரின் உடல்நிலையில் பாதிப்பு இருக்கும். வியாபாரம், தொழிலில் அதிகபட்ச முயற்சி தேவைப்படும். இந்த நேரத்தில் வெளிநாட்டு தொடர்பால் ஆதாயம் கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கு மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். நவ. 13 முதல் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவும், பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவும் உங்கள் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவர். தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் அதிகரிப்பர். எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவர். செல்வாக்கு, கவுரவத்துடன் வாழ வைப்பர்.


குரு சஞ்சாரம்

மார்ச் 16 வரை மிதுனத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் குரு, மார்ச் 17 முதல் வக்ர நிவர்த்தியாகிறார், தொடர்ந்து மே 26 முதல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிப்பவர், அக். 20 முதல் சிம்மத்திற்கு அதிசாரமாக செல்வதால் மே 25 வரை கவனமாகவும், நிதானமாகவும் செயல்படுவது நல்லது.  மே 26 முதல் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவாலும் அவருடைய பார்வையாலும் யோக பலன் உண்டாகும். செல்வம், செல்வாக்கு, அந்தஸ்து, பட்டம், பதவி, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் என கனவு நனவாகும். அக்.20 முதல் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் வேலை, தொழிலில் ஆர்வமும், அக்கறையும் அதிகரிக்கும். 


சூரிய சஞ்சாரம்

ஜன. 15 –  பிப். 12,  ஏப். 14 –   மே. 14 காலங்களிலும், ஆக. 18 –  அக். 17 காலத்திலும் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் சூரியனால் முயற்சி வெற்றியாகும். முடியாது என கை விட்ட வேலையைக் கூட முடித்து விடுவீர்கள். வியாபாரம், தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும்.  வேலை தேடுவோருக்கும், தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கும் நல்ல வாய்ப்பு கிடைக்கும். உடலில் ஆரோக்கியம், வழக்கில் வெற்றி கிடைக்கும். 


பொதுப்பலன்  

2026 ம் ஆண்டில் முயற்சிகள் வெற்றி பெறும். இதுவரை இருந்த நெருக்கடி, பிரச்னை, போராட்டம் யாவும் விலகும். கடந்த கால அனுபவம் மூலம் திட்டமிட்டு செயல்படுவீர்கள். படிப்பு, வேலை, திருமணம், வீடு, வாகனம், தொழில் என எதிர்பார்ப்பு நிறைவேறும்.  பிள்ளைகளுக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெறும். பொருளாதார நிலை உயரும்.


தொழில்  

சனியின் பார்வை ராசியை விட்டு விலகுவதால் தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். முன்னேற புதிய வழிகள் தெரியும்.  எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க முயற்சிப்பவர்களுக்கு அரசு வழியில் அனுமதி கிடைக்கும். விவசாயம், கால்நடை வளர்ப்பு, எண்ணெய் வியாபாரம், இன்ஜினியரிங், பேக்டரி, உதிரி பாகம் தயாரிப்பு, வாகன விற்பனை, மருத்துவம், விளையாட்டுப் பொருள், கம்யூட்டர், பொறியியல், ரசாயனம், டிராவல் ஏஜன்சி மூலம் லாபம் பெருகும். 


பணியாளர்கள் 

பணியிடத்தில் இருந்த நெருக்கடி, தள்ளிப் போன பதவி உயர்வு, சலுகை கிடைக்காமல் போராட்டம் என்றிருந்த நிலை மாறும். சட்ட சிக்கல்கள் முடிவிற்கு வரும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய உயர்வும் இடமாற்றமும் கிடைக்கும். தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்களின்  மனக்குறை விலகும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.


பெண்கள் 

கர்மக் காரகன் சனியின் பார்வையில் சிக்கியதால் என்னதான் முயற்சி செய்தாலும் எதுவும் நடக்கவில்லை, எப்படித்தான் போராடிப் பார்த்தாலும் நல்ல வழி தெரியவில்லை என அவதிப்பட்ட நிலை மாறும். இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது போல் உணர்வீர்கள். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் என அவரவர் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நன்மை நடக்கும்.  பிள்ளைகள் வழியில் செய்யும் முயற்சி வெற்றி பெறும். வயிற்றுப் பிரச்னை, கர்ப்பப்பை கோளாறு என உடல் பாதிப்பு விலகும். பணியாளர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி விலகும். கணவரின் அன்பு அதிகரிக்கும். பொன், பொருள் சேரும்.  நிம்மதியாக வாழக்கூடிய நிலை உண்டாகும்.


கல்வி 

படிப்பில் ஏற்பட்ட தடை விலகும். பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர் கல்விக்கான முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த கல்லுாரியில் இடம் கிடைக்கும். தேர்வு வரை படிப்பைத் தவிர வேறு சிந்தனைக்கு இடமளிக்காமல் ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்பது அவசியம்.


உடல்நிலை 

பரம்பரை நோய், தொற்று நோய், விபத்து, என்ன நோய் என கண்டு பிடிக்க முடியாத நிலை என எந்த நிலையில் இருந்தாலும் நல்ல மாற்றம் ஏற்படும். ராசியை விட்டு சனிப்பார்வை விலகுவதால் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச்செலவு குறையும்.


குடும்பம் 

குடும்பத்தின் மீது அக்கறை அதிகரிக்கும். உறவு, நட்பு வட்டத்தாலும் அவமானத்திற்கும் சங்கடத்திற்கும் ஆளான நிலை மாறும். குடும்பம், குழந்தைகள் என்ற எண்ணத்திற்கு வருவீர்கள். மனதில் நிம்மதி நிலைக்கும். தம்பதி ஒற்றுமை அதிகரிக்கும். புதிய இடம், வீடு, வாகனம், நவீன பொருள் வாங்குவீர்கள்.


பரிகாரம்: திருச்செந்துார் முருகனை  வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும். நன்மை நடக்கும்.


கேட்டை: நெருக்கடி நீங்கும்


வித்யா காரகனான புதன், தைரிய வீரிய காரகனான செவ்வாய் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு,  2026 ம் ஆண்டு நெருக்கடி நீங்கி நன்மைகள் காணும் ஆண்டாக இருக்கும். எந்த வேலையை எடுத்தாலும் இழுபறி, முயற்சிக்கு மேல் முயற்சி செய்தால் அதிலும் தடைகள், அமைதியாக நாட்களை நகர்த்த நினைத்தாலும் வீண் வம்புகள், பிரச்னைகள் என்றிருந்த நிலை மாறும். புயலடித்து ஓய்ந்தது போல மனதில் நிம்மதி உண்டாகும். எதிர்பார்த்த உயர்வு ஏற்படும். நினைத்தது நடந்தேறும். விரும்பிய மாற்றம் ஏற்படும். உடல்நிலை சீராகும். பொருளாதார நிலை உயரும்.


சனி சஞ்சாரம் 

கடந்த இரண்டரை ஆண்டாக அர்த்தாஷ்டமச்சனியின் பிடியில் சிக்கி வியாபாரம், தொழிலில் பிரச்னை, நெருக்கடியை சந்தித்திருப்பீர்கள். உங்கள் மனதில் சங்கடம், உடல்நிலையில் பாதிப்பு அல்லது யாருக்கு வலியைக் கொடுத்தால் உங்களுக்கு அதிகம் வலிக்குமோ அவருக்கு வலியைக் கொடுத்து உங்களை நெருக்கடிக்கு ஆளாக்கி வந்த சனி, மார்ச் 6 முதல் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5 ம் இடத்திற்கு பெயர்ச்சியாவதால், சனியின் பார்வை உங்களை விட்டு முழுமையாக விலகுகிறது. இதுவரை நீங்கள் அடைந்த அவமானம், சங்கடம், மன உளைச்சல் யாவும் மறையும். எடுக்கும் வேலைகள் இனி வெற்றியாகும். வியாபாரம், தொழில் எதிர்பார்த்த அளவிற்கு முன்னேற்றம் உண்டாகும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.


ராகு, கேது சஞ்சாரம் 

நவ.12 வரை சுக ஸ்தானத்தில் ராகு, ஜீவன ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் தொழிலில் முழுமையான அக்கறை தேவைப்படும். பணியாளர்கள் எதிர்பார்ப்பு நிறைவேற கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். நவ.13 முதல் ராகு சகாய ஸ்தானத்திலும், கேது பாக்ய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். விஐபிகள் வரிசையில் இடம் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். செல்வாக்கும் கவுரவமும் உண்டாகும்.


குரு சஞ்சாரம்

மார்ச் 16 வரை மிதுனத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் குரு, மார்ச் 17 முதல் வக்ர நிவர்த்தியாகிறார், தொடர்ந்து மே 26 முதல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிப்பவர், அக்.20 முதல் சிம்மத்திற்கு அதிசாரமாக செல்வதால், மே 25 வரை அஷ்டம குருவால் எந்த ஒன்றிலும் உங்களால் தெளிவான முடிவிற்கு வர முடியாமல் போகும். வீண் செலவுகள் கட்டுப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நான்காமிட ராகுவின் பாதிப்பில் இருந்து விடுபடுவீர்கள். மே 26 முதல் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு, உங்கள் செல்வாக்கை உயர்த்துவார். செல்வம், செல்வாக்கு, அந்தஸ்து, பட்டம், பதவி, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் என கனவுகள் நனவாகும். அதிர்ஷ்ட மழையில் நனைவீர்கள். அக். 20 முதல் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு வேலையிலும், தொழிலிலும் அக்கறை ஏற்படும். எதிர்ப்பு, போட்டி, வழக்குகளை இல்லாமல் செய்வார். உடல்நிலை சீராகும். 


சூரிய சஞ்சாரம்

ஜன. 15 – பிப். 12,  ஏப். 14 –  மே 14 காலங்களிலும், ஆக.18 – அக்.17 காலத்திலும் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் சூரியன் இருட்டில் இருப்பவரை வெளிச்சத்திற்கு கொண்டு வருவார். சங்கடத்தில் இருப்பவர்களுக்கு நன்மை உண்டாகும். நோய் விலகி ஆரோக்கியம் மேம்படும். வம்பு வழக்கு என அவதிப்பட்டவர்களுக்கு சாதமான நிலை உருவாகும். வேலை தேடுவோரும்,  இட மாற்றத்திற்காக காத்திருப்போரும் நன்மை காண்பர். வியாபாரம், தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். 


பொதுப்பலன்  

2026 உங்களுக்கு முன்னேற்றமான ஆண்டாக இருக்கும். கடந்த ஆண்டின் நெருக்கடி விலகும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். அதன் காரணமாக வேகமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். நீண்டநாள் பிரச்னைக்கு முடிவு காண்பீர்கள். இழுபறியாக இருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர்கள். வியாபாரிகள், அரசியல்வாதிகள் கலைஞர்களுக்கு நன்மை அதிகரிக்கும். கடன் தொல்லை மறையும். சொத்து சேரும். பொருளாதாரம் உயரும். 


தொழில் 

உங்கள் ராசியை விட்டு சனியின் பார்வை விலகுவதால் தொழில் மீண்டும் முன்னேற்றம் பெறும்.  கடந்த இரண்டரை ஆண்டாக இருந்த நெருக்கடி, போராட்டம் விலகும். உங்கள் முதலீட்டிற்கும் முயற்சிக்கும் உரிய லாபம் கிடைக்கும். வியாபாரம், நிதி நிறுவனம், ஸ்டேசனரி, அச்சகம், செய்தித்தாள், நோட்டுப் புத்தகம், காலண்டர் தயாரிப்பு, விற்பனை, தகவல் தொடர்பு, விளம்பரம், ஷேர் மார்க்கட், கான்ட்ராக்ட், ஏஜன்சி, கூட்டுத்தொழில், விவசாயம், கால்நடை வளர்ப்பு, எண்ணெய் வியாபாரம், மருத்துவம், ரசாயனம், டிராவல் ஏஜன்சி தொழில்கள் மூலம் வருமானம் பெருகும். 


பணியாளர்கள் 

வேலையில் நிம்மதி இல்லை, திறமைக்கு மதிப்பு இல்லை, உழைப்பிற்கேற்ப ஊதியம், ஓய்வு,  சலுகை இல்லை என வருந்திய நிலை மாறும். நிர்வாகத்தின் மதிப்பிற்குரியவராக மாறுவீர்கள். வேலையில் எதிர்பார்த்த இடம், சம்பளம் கிடைக்கும். பணியாளர்களுக்கு இழுபறியாக இருந்த பதவி உயர்வும், இடமாற்றமும் கிடைக்கும்.


பெண்கள்

எந்த ஒன்றிலும் போராட்டமாக இருந்த நிலை மாறும். எதிர்பார்ப்பு நிறைவேறும். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் என அவரவர் கனவு நனவாகும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். சுய தொழில் செய்பவர்கள் ஆதாயம் காண்பர். பொன், பொருள் சேரும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும்.


கல்வி 

படிப்பில் அக்கறை அதிகரிக்கும். ஆசிரியர்கள் ஆலோசனையால் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் வரும். விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும்.


உடல்நிலை 

நோயால் சிகிச்சை பெற்ற நிலையில் உடலில் குணம் தெரியும். சனியின் பார்வை உங்களை விட்டு விலகுவதால் மருத்துவச்செலவு குறையும். ஆரோக்கியம் சீராகும்.


குடும்பம் 

குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். செய்த தவறுகளில் கிடைத்த பாடம் மூலம் உங்களைத் திருத்திக் கொள்வீர்கள். வாழ்க்கைத் துணையின் நலனிலும், பிள்ளைகளின் வளர்ச்சியிலும் அக்கறை கொள்வீர்கள். குடும்பத்தில் சுபிட்ச நிலை உண்டாகும். புதிய இடம், வீடு, வாகனம் என வசதிகள் கிடைக்கும். செல்வாக்கு உயரும்.


பரிகாரம் : யோக நரசிம்மரை வழிபட சங்கடம் தீரும். நன்மை நடக்கும்.

 
மேலும் 2026 வருட ராசி பலன் »
temple news
அசுவினி: வெற்றி மீது வெற்றிதைரிய காரகன் செவ்வாய், ஞான மோட்சக்காரகன் கேதுவின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
அசுவினி; யோக காலம்செவ்வாய், கேதுவின் அம்சம் கொண்ட உங்களுக்கு பிறக்கும் 2025 ஆங்கில வருடம் யோகமான வருடமாக ... மேலும்
 
temple news
அசுவினி; நல்லநேரம் ஆரம்பம்செவ்வாய், பகவான் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு 2024 ஆங்கில வருடத்தில் ... மேலும்
 
temple news
அசுவினி: தன்னலம் பாராமல் பிறருக்கு உதவும் அசுவினி நட்சத்திர அன்பர்களே இந்த ஆண்டு நீங்கள் ... மேலும்
 
temple news
கார்த்திகை: நல்லகாலம் வந்தாச்சுஆத்ம காரகன் சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar