Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தனுசு : ஆங்கில புத்தாண்டுப் பலன்கள் 2026 கும்பம் : ஆங்கில புத்தாண்டுப் பலன்கள் 2026 கும்பம் : ஆங்கில புத்தாண்டுப் ...
முதல் பக்கம் » 2026 வருட ராசி பலன்
மகரம் : ஆங்கில புத்தாண்டுப் பலன்கள் 2026
எழுத்தின் அளவு:
மகரம் : ஆங்கில புத்தாண்டுப் பலன்கள் 2026

பதிவு செய்த நாள்

27 டிச
2025
03:12

உத்திராடம்: நல்ல நேரம் வந்தாச்சு


ஆத்ம காரகனான சூரியன் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1ம் பாதமான தனுசுவில் பிறந்தவர்களுக்கு குரு ராசிநாதனாகவும், 2,3,4ம் பாதங்களான மகரத்தில் பிறந்தவர்களுக்கு சனி ராசிநாதனாகவும் உள்ளனர். 2026ம் ஆண்டில் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு, சின்னச்சின்ன நெருக்கடிகள் இருந்தாலும் பணவரவு, அந்தஸ்து, கவுரவம், செல்வாக்கு, பட்டம், பதவி என்பதெல்லாம் தேடி வரும். நினைத்தது நடந்தேறும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏழரை ஆண்டு காலமாக அனுபவித்த நெருக்கடி, சந்தித்த போராட்டம், ஏற்பட்ட அவமானம் எல்லாம் விலகும். இழந்த செல்வாக்கு, சொத்து, அந்தஸ்து, பதவி எல்லாம் மீண்டும் கிடைக்கும்.


சனி சஞ்சாரம்

 உத்திராடம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மார்ச் 5 வரை யோகப்பலன் வழங்குவார் சனி. தைரியமாக செயல்பட வைப்பார். மார்ச் 6 முதல் அர்த்தாஷ்டமச்சனியாக சஞ்சரிப்பதால், உழைப்பு அதிகரிக்கும். அதன் காரணமாக சிலருக்கு உடல்நிலை பாதிக்கும். வேலையில் ஏதேனும் பிரச்னை தோன்றிக் கொண்டே இருக்கும். தொழிலில் நீங்கள் எடுக்கும் முயற்சி இழுபறியாகும். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6 முதல் சகாய ஸ்தானத்தில் சனி சஞ்சரிக்கப் போவதால் ஏழரைச்சனியின் பிடியில் இருந்து வெளியில் வரப் போகிறீர்கள். இனி எடுக்கும் முயற்சி வெற்றியாகும். தடைபட்ட வேலை நடந்தேறும். வருமானம் உயரும். வசதி அதிகரிக்கும்.


ராகு, கேது சஞ்சாரம்


நவ.12 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும் சஞ்சரித்து நவ.13 முதல் ராகு மகரத்திலும், கேது கடகத்திலும் சஞ்சரிப்பதால் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நவ.12 வரை எடுக்கும் முயற்சி வெற்றியாகும். விருப்பம் நிறைவேறும். நவ.13 முதல் வரவு செலவிலும், சுய ஒழுக்கத்திலும், உடல்நிலையிலும் கவனமாக இருக்க வேண்டும். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்கள் ஆண்டு முழுவதும்  நிதானமாக இருப்பதுடன் வாழ்க்கைத்துணையை அனுசரித்துச் செல்வதும் தவறான நட்புகளை ஒதுக்கி வைப்பதும், உடல்நிலையில் கவனமாக இருப்பதும் நன்மை தரும்.


குரு சஞ்சாரம்


மார்ச் 16 வரை மிதுனத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் குரு, மார்ச் 17 முதல் வக்ர நிவர்த்தியாகிறார், தொடர்ந்து மே 26 முதல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிப்பவர், அக்.20 முதல் சிம்மத்திற்கு அதிசாரமாக  சஞ்சரிப்பதால், 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு

 மே 25 வரை ராசிக்கு குருபார்வை கிடைப்பதால்  செல்வாக்கு உயரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். மே 26 முதல் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வையால் நன்மை உண்டாகும். சனியால் உண்டாகும் பாதிப்பு விலகும். அக்.20 முதல் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் உங்கள் செல்வாக்கு உயரும். திருமணம் நடந்தேறும். குழந்தை பாக்கியம் உண்டாகும்.

 தடைபட்ட வேலைகள் முடிவிற்கு வரும். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு

 மே25 வரை எதிர்ப்பு, நோயை ஏற்படுத்தினாலும், மே 26 முதல் வெற்றி, தொழிலில் லாபம், வேலையில் முன்னேற்றம், குடும்பத்தில் மகிழ்ச்சி, செல்வாக்கு என்ற நி்லை ஏற்படும். அக். 20 முதல் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் செலவு குறையும், குடும்பத்தில் நிம்மதி இருக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். 


சூரிய சஞ்சாரம் 

உத்திராடம்1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு

 பிப்.13 – மார்ச் 14, மே 15 – ஜூன் 14 காலங்களிலும், செப். 18 – நவ.16 காலத்திலும், 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 15 – ஏப்.13, ஜூன் 15 – ஜூலை 16 காலங்களிலும், அக்.18 – டிச.15 காலத்திலும் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் சூரியனால் முயற்சியில் ஏற்பட்ட தடை விலகும். எதிர்ப்பு, பகை, போட்டி, வழக்கு என்ற நிலை மாறும்.  செல்வாக்கு உயரும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். வேலை தேடியவர்களுக்கு வேலை கிடைக்கும். பொருளாதார நிலை உயரும்.


பொதுப்பலன்


2026ல் எதிர்பார்ப்பு நிறைவேறும்.  நீண்டநாள் போராட்டம் முடிவிற்கு வரும். தலை நிமிர்ந்து வாழும் நிலை ஏற்படும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். குடும்பத்தில் சுபிட்சம் இருக்கும். சிலர் புதிய தொழில் தொடங்கி லாபமடைவர். பணம், புகழ், பதவி, பட்டம் என்ற கனவுகள் நனவாகும்.


தொழில்


தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். பணியாளர் ஒத்துழைப்பு கிடைக்கும். வருமானம் உயரும். நிதி நிறுவனம், உதிரி பாகம் தயாரிப்பு, விற்பனை, இயந்திர தொழிற்கூடம், வாகன விற்பனை, எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், தகவல் தொடர்பு, எக்ஸ்போர்ட், ஆன்லைன் வர்த்தகம், ஜூவல்லரி தொழில்கள் முன்னேற்றமடையும்.


பணியாளர்கள்


அரசு பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். தற்காலிகமாக பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். தனியார் நிறுவன பணியாளர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். நிர்வாகத்தின் ஆதரவு உண்டாகும். வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு  நெருக்கடிகள் விலகும்.


பெண்கள்


குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். தம்பதிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். விவாகரத்து வரை சென்றவர்களும் சமாதானம் அடைவர். திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும். குழந்தை பாக்கியம் உண்டாகும். எதிர்பார்த்த வேலை கிடைக்கும். வேலையில் நிம்மதி கிடைக்கப் பெறுவீர்கள். பொன், பொருள் சேரும். குழந்தைகள் மீது அக்கறை அதிகரிக்கும்.


கல்வி


படிப்பில் அக்கறை தேவை. தேர்வு நேரத்தில் பார்க்கலாம் என்ற அலட்சியம் வேண்டாம். ஆசிரியர்கள் ஆலோசனையை கவனமாக ஏற்பவர்களுக்கு தேர்வு முடிவுகள் சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும்.


உடல்நிலை

உடல்நிலையில் அக்கறை தேவை.  வாகனப் பயணத்திலும், இயந்திரப் பணியிலும், சுய ஒழுக்கத்திலும் கவனமாக இருப்பது அவசியம். சிலர் தொற்று நோய்க்கு ஆளாகக்கூடும். பரம்பரை நோயின் வீரியமும் இருக்கும். என்ன நோய் என கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு ஒவ்வொரு மருத்துவராக சந்திக்கும் நிலை வரலாம். 


குடும்பம்


குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் மறையும். எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். புதிய இடம், வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். தம்பதிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர் மத்தியில் செல்வாக்கு கூடும். பிள்ளைகளுக்கு வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் என எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 


பரிகாரம் : அபிராமியம்மன், அமிர்தகடேஸ்வரரை வழிபட்டால் நன்மை அதிகரிக்கும். 


திருவோணம்: அதிர்ஷ்ட காலம்


ஆயுள்காரகன் சனி, மனக்காரகன் சந்திரன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு,  2026 ல் சங்கடம் நீங்கி நன்மை நடக்கும். நீண்டநாள் முயற்சிகள் வெற்றியாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். எடுத்த வேலைகள் நடந்தேறும். எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும்.  நினைத்ததை சாதிக்கும் அளவிற்கு செல்வாக்கு உயரும்.


சனி சஞ்சாரம்  

உங்கள் ராசிநாதன் சனி மார்ச் 6 முதல் முயற்சி, சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போவதால் ஏழரை ஆண்டு காலமாக நீங்கள் அனுபவித்த நெருக்கடி உங்களை விட்டு விலகும். மனதில் புதிய நம்பிக்கை உண்டாகும். ஆரோக்யத்தில் ஏற்பட்ட குறைகள் விலகும். தொழில், வேலை, குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு அதிகரிக்கும். 


ராகு, கேது சஞ்சாரம் 

நவ.12 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும் சஞ்சரித்து நவ.13 முதல் மகரத்திற்கு ராகுவும், கடகத்திற்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதால், ஆண்டு முழுவதும் நீங்கள் ஒவ்வொரு வேலையிலும் முழு கவனத்தை செலுத்த வேண்டும். குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பதுடன் அவர்களை முன்னிலைப்படுத்தி உங்கள் வேலைகளை நடத்துவது நன்மையாகும். தவறானவர்கள் நட்பால் இந்த நேரத்தில் சட்ட சிக்கல்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும் என்பதால் அவர்களை விட்டு விலகுவது அவசியம். தொழில், வேலை, அரசியலில் உங்களுக்கு எதிராக இருப்பவர்கள் உங்களை அவமானப்படுத்த வாய்ப்பிருப்பதால் சுய ஒழுக்கத்தில் தொடங்கி அனைத்திலும் கவனமாக இருக்க வேண்டும். உடல் நிலையில் கூடுதல் அக்கறை தேவை.


குரு சஞ்சாரம்

மார்ச் 16 வரை மிதுனத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் குரு, மார்ச் 17 முதல் வக்ர நிவர்த்தியாகிறார், தொடர்ந்து மே 26 முதல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிப்பவர், அக். 20 முதல் சிம்மத்திற்கு அதிசாரமாக  சஞ்சரிப்பதால்,மே 25 வரை ஆறாமிட குரு எதிர்ப்பு, பகை, போராட்டம், நோயை ஏற்படுத்தினாலும் அவரது பார்வையால் வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும்.  பணியாளர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் ஏற்படும். மே 26 முதல் சப்தம ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரிக்கும் குருவால் செல்வாக்கு உயரும். எடுத்த வேலைகள் யாவும் வெற்றியாகும் தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் செல்வம், செல்வாக்கு அந்தஸ்து ஏற்படும். அக். 20 முதல் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் அவரது பார்வையால் விரயச்செலவுகள் குறையும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.  விருப்பம் பூர்த்தியாகும்.


சூரிய சஞ்சாரம்

மார்ச் 15 – ஏப். 13, ஜூன் 15 – ஜூலை 16 காலங்களிலும், அக். 18 – டிச. 15 காலத்திலும் சூரிய சஞ்சார நிலை உங்களுக்கு சாதகமான நிலையை உண்டாக்கும்.  வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். வேலையில் எதிர்பார்த்த மாற்றம் ஏற்படும். உடல்நிலை சீராகும். அரசுவழி முயற்சி வெற்றி பெறும்.  வருமானம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும்.


பொதுப்பலன்  

2026 உங்களுக்கு யோகமான ஆண்டாகும். எடுத்த வேலைகள் தடையின்றி நடந்தேறும். வேலை, திருமணம், தொழில் என வாழ்வு அர்த்தமாகும். செல்வாக்கு உயரும். செலவிற்கேற்ற வரவு வந்து கொண்டிருக்கும். சிலர் புதிய தொழில் தொடங்கி லாபம் காண்பர்.  நீண்டநாள் கனவுகள் நனவாகும்.


தொழில்  

தொழில் மீது அக்கறை அதிகரிக்கும். இதுவரை இருந்த பாதிப்பு, ஏற்பட்ட தடை விலகும். தொழிலை விரிவு செய்யும் முயற்சி வெற்றியாகும். உங்கள் முயற்சிக்கு பணியாளர்கள் ஒத்துழைப்பர். உதிரி பாகங்கள் தயாரிப்பு, விற்பனை, இயந்திர தொழிற்கூடம், வாகன விற்பனை, கால்நடை வளர்ப்பு, எண்ணெய் வியாபாரம்,  எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், விவசாயம், பால், குடிநீர் தயாரிப்பு, விற்பனை, ஜவுளி தொழில்கள் முன்னேற்றம் பெறும். 


பணியாளர்கள்

 பணி இடத்தில் இருந்த நெருக்கடி விலகும். உங்கள் திறமைக்குரிய மரியாதை உண்டாகும். நிர்வாகத்தின் பார்வைக்கு ஆளாவீர்கள். எதிர்பார்த்த சலுகை, உயர்வும் கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு நீண்ட நாளாக தடைபட்ட இடமாற்றம், வேலை உயர்வு கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களில் சிலர் தாய்மண்ணுக்கு வர வேண்டிய நிலை ஏற்படும்.


பெண்கள் 

உடல் நிலை,  மனநிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் தனி செல்வாக்கு உண்டாகும். வேலை பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.  திருமணம்,   குழந்தை பாக்கியம் ஏற்படும். கணவரின் அன்பு அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். சுய தொழில் செய்பவர்களுக்கு லாபம் காணும் நிலை உண்டாகும்.


கல்வி 

பொதுத்தேர்வை எதிர்கொள்பவர்களுக்கு படிப்பில் கூடுதல் அக்கறை தேவை. ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்பதுடன் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்க அக்கறை தேவை. 


உடல்நிலை

மருத்துவச் செலவால் அவதிப்பட்ட நிலை மாறும். உடலில் இருந்த பாதிப்பு விலக ஆரம்பிக்கும். செரிமானக் கோளாறு, இளைப்பு, அல்சர், மன அழுத்தம், உறக்கமின்மை, கேஸ்டிக், பரம்பரை நோய் என அவதிப்பட்டவர்களுக்கு சங்கடம் விலகும். மாற்று மருத்துவத்தால் நன்மை உண்டாகும்.


குடும்பம்  

குடும்பத்தில் முன்னேற்ற நிலை உண்டாகும். இடம், வீடு, வாகனம் வாங்கும் கனவு நனவாகும். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட இடைவெளி விலகும். பொன், பொருள் சேரும். பிள்ளைகளின் நலனில் அக்கறை அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். நீண்ட நாளுக்குப் பிறகு நிம்மதியான நிலை உண்டாகும்.


பரிகாரம் வெங்கடாஜலபதியை வழிபட நன்மை உண்டாகும். சங்கடம் விலகும்.


அவிட்டம்: நிதானம் அவசியம்


சகோதர, தைரிய, வீரிய, பராக்கிரமக் காரகனான செவ்வாய் நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும், 1,2 ம் பாதங்களான மகரத்தில் பிறந்தவர்களுக்கும், 3,4 ம் பாதங்களான கும்பத்தில் பிறந்தவர்களுக்கும் ஆயுள்காரகனான சனியே ராசி நாதனாவார்.


2026ல் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏழரைச்சனி விலகுவதால் கடந்த ஆண்டில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். எடுக்கும் வேலைகளில் வெற்றியுண்டாகும். ஆதாயம் கூடும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜென்ம ராசியை விட்டு சனி விலகுவதும், குருவின் சஞ்சாரங்களும் பார்வைகளும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். செல்வாக்கை உயர்த்தும். 


சனி சஞ்சாரம் 

 அவிட்டம் 1,2 ம் பாதத்தினருக்கு மார்ச் 6 முதல் முயற்சி, சகாய ஸ்தானத்தில் சனி சஞ்சரிக்கப்பதால் இதுவரை அனுபவித்து வந்த சங்கடங்களும் நெருக்கடிகளும் இனி இல்லாமல் போகும். தொழில், வேலை, குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். 3,4 ம் பாதத்தினருக்கு மார்ச் 6 முதல் ராசியை விட்டு சனி விலகுவது பெரும் நன்மையாகும். பாத சனியாக சஞ்சரித்து வருமானத்தை அதிகரிப்பார். வரவேண்டிய பணம் வரும். சேமிப்பு உயரும். வேலைகளில் ஏற்பட்ட மந்தநிலை நீங்கும்.


ராகு, கேது சஞ்சாரம் 

நவ.12 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும் சஞ்சரித்து நவ.13 முதல் மகரத்திற்கு ராகுவும், கடகத்திற்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதால் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு வேலையில் தடை, எதிர்பார்ப்பில் இழுபறி, கொடுக்கல் வாங்கலில் பிரச்னை, ஆரோக்யத்தில் பின்னடைவு, சிலருக்கு அவமானம் ஏற்படும். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ.12 வரை அவசரப்பட்டு தேவையில்லாதவற்றில் முதலீடு செய்வதும், போட்ட பணத்தை எடுக்க முடியாமல் போராட வேண்டிய நிலையும், தவறான நண்பர்களால் சங்கடத்திற்கு ஆளாகும் நிலையும் ஏற்படும். நவ. 13 முதல் இந்த நிலை மாறும். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். எதிர்ப்பு விலகும். வழக்கு வெற்றியாகும். உடல்நிலை சீராகும். செல்வாக்கு உயரும்.


குரு சஞ்சாரம்

மார்ச் 16 வரை மிதுனத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் குரு, மார்ச் 17 முதல் வக்ர நிவர்த்தியாகிறார், தொடர்ந்து மே 26 முதல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிப்பவர், அக். 20 முதல் சிம்மத்திற்கு அதிசாரமாக  சஞ்சரிப்பதால், 1,2 ம் பாதத்தினருக்கு மே 25 வரை குருவின் பார்வைகளால் வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் ஏற்படும். மே26 முதல் சப்தம குருவால் செல்வாக்கு உயரும். தொழிலில் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

அக். 20 முதல் குருவின் பார்வைகளால் விரயச் செலவுகள் குறையும், பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். 3,4 ம் பாதத்தினருக்கு மே 25 வரை பஞ்சம குருவால் பட்டம், பதவி, செல்வாக்கு, அந்தஸ்து, சொத்து, சுகம் என அனைத்திலும் மகிழ்ச்சி உண்டாகும். மே26 முதல் குருவின் பார்வைகளால் வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அக். 20 முதல் சப்தம குருவால் செல்வாக்கு உயரும். தடைபட்ட வேலை நடந்தேறும். பெரிய மனிதர்கள் ஆதரவால் விருப்பம் நிறைவேறும். 


சூரிய சஞ்சாரம்

அவிட்டம் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 15 – ஏப். 13, ஜூன். 15 – ஜூலை 16 காலங்களிலும், அக்.18 – டிச.15 காலத்திலும், 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு  ஜன.1 – 14 மற்றும் ஏப். 14 – மே14 காலங்களிலும், ஜூலை 17 – ஆக.17,  நவ. 17 – டிச. 31 காலத்திலும் சூரியனின் சஞ்சார நிலைகள் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரம், தொழிலில் ஆதாயம் உண்டாகும். பணியில் உயர்வை வழங்கும். அரசுவழி முயற்சி வெற்றி பெறும். உடல்நிலை சீராகும். வழக்கு சாதகமாகும். வாய்ப்பு தேடிவரும்.


பொதுப்பலன் 

எல்லாவற்றையும் எதிர்கொண்டு வாழத் தெரிந்த உங்களுக்கு 2026  நன்மையான ஆண்டாக இருக்கும். வரவு அதிகரிக்கும். கடன் விலகும். உடல்நிலை சீராகும். எடுத்த வேலைகளில் வெற்றி உண்டாகும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். புதிய தொழில் அமையும். எதிர்பார்த்த வேலை கிடைக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.


தொழில்  

தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். விவசாயம், ரியல் எஸ்டேட், மெடிக்கல், கெமிக்கல், உணவகம், ரசாயனம், ஆயில் ஸ்டோர், இயந்திரத் தொழில், வாகன உற்பத்தி, உதிரி பாகங்கள் தயாரிப்பு, விற்பனை, ஆட்டோ மொபைல்ஸ்,  வாகன விற்பனை, டிராவல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், விவசாயம், எக்ஸ்போர்ட், ஆன்லைன் வர்த்தகம் முன்னேற்றமடையும்.


பணியாளர்கள் 

வேலையில் இருந்த நெருக்கடி விலகும். கடுமையாக உழைத்தும் அதற்கேற்ற ஊதியம் இல்லை, அங்கீகாரம் இல்லை என வருந்தும் நிலை மாறும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பணியாளர்களின் நீண்டநாள் முயற்சி வெற்றியாகும். தடைபட்டு வந்த இடமாற்றம், பதவி உயர்வு இந்த ஆண்டில் கிடைக்கும்.


பெண்கள் 

வாழ்க்கை போராட்டமாக இருக்கிறதே; நமக்கு விடிவே வராதா என ஏங்கியவர்களின் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம், செல்வம், செல்வாக்கு என அவரவர் நிலைக்கேற்ப கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். எலியும், பூனையுமாக இருந்த தம்பதியர் உடலும் உயிருமாக மாறுவர். வேலை பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வெளியூரில் வேலை பார்ப்பவர்களுக்கு சொந்த ஊருக்கு மாறுதல் கிடைக்கும். 


கல்வி 

படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். தேர்வு வரையில் உங்கள் கவனத்தை வேறு எங்கும் செலுத்தாமல் ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்பது அவசியம்.


உடல்நிலை

பரம்பரை நோய், தொற்று நோய் என அவதிப்பட்டவர்களுக்கு உடல் பாதிப்பு விலக ஆரம்பிக்கும். உடல் நலத்துடன் நடை போடுவீர்கள் என்றாலும் சனியின் பார்வையும் கேதுவும் உங்களுக்கு எந்த நேரத்திலும் சங்கடத்தை உண்டாக்கலாம் என்பதால் வாகனப்பயணத்தில் அதிகபட்ச நிதானமும் கவனமும் தேவை.


குடும்பம்  

குடும்பத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். தம்பதிக்குள் இணக்கம் உண்டாகும். வேலையின் காரணமாக பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேர்வதுடன் கவுரவமாக வாழ வேண்டும் என்ற முடிவிற்கு வருவர். புதிய இடம், வீடு, வாகனம், ஆடை ஆபரணம் என வாங்குவீர்கள். குடும்பத்தில் சுபிட்ச நிலை இருக்கும்.


பரிகாரம் : வடபழநி முருகனை வழிபட்டால் வாழ்வில் வளம் சேரும். 

 
மேலும் 2026 வருட ராசி பலன் »
temple news
அசுவினி: வெற்றி மீது வெற்றிதைரிய காரகன் செவ்வாய், ஞான மோட்சக்காரகன் கேதுவின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
அசுவினி; யோக காலம்செவ்வாய், கேதுவின் அம்சம் கொண்ட உங்களுக்கு பிறக்கும் 2025 ஆங்கில வருடம் யோகமான வருடமாக ... மேலும்
 
temple news
அசுவினி; நல்லநேரம் ஆரம்பம்செவ்வாய், பகவான் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு 2024 ஆங்கில வருடத்தில் ... மேலும்
 
temple news
அசுவினி: தன்னலம் பாராமல் பிறருக்கு உதவும் அசுவினி நட்சத்திர அன்பர்களே இந்த ஆண்டு நீங்கள் ... மேலும்
 
temple news
கார்த்திகை: நல்லகாலம் வந்தாச்சுஆத்ம காரகன் சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar