மீனம் : ஆங்கில புத்தாண்டுப் பலன்கள் 2026
பதிவு செய்த நாள்
27
டிச 2025 03:12
பூரட்டாதி: வெற்றி நிச்சயம் தன புத்திரக்காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1,2,3 ம் பாதங்களான கும்பத்தில் பிறந்தவர்களுக்கு சனி ராசி நாதனாகவும், 4ம் பாதமான மீனத்தில் பிறந்தவர்களுக்கு குருவே ராசிநாதனாகவும் உள்ளனர். 2026ம் ஆண்டில் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு இதுவரை இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு வீண் செலவு குறையும். மனதில் நிம்மதி உண்டாகும். உடல்நிலை சீராகும். வழக்குகள் சாதகமாகும். அந்தஸ்து உயரும். பூரட்டாதி 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6 முதல் ஜென்ம சனி விலகுவதால் உடல்நிலை சீராகும். பயந்து செயல்பட்டு வந்த நிலை மாறும். வியாபாரம், தொழிலில் கவனம் அதிகரிக்கும். வருமானம் உயரும். 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு பொருளாதார நெருக்கடி நீங்கும். வீண் செலவு குறையும். தடைபட்டு வந்த வேலைகள் முடிவிற்கு வரும். உடல்நிலையிலும், வாழ்க்கைத்துணையின் நலனிலும், தொழிலிலும் கூடுதல் கவனம் தேவை. அஸ்தமனம், வக்கிரம், குரு பார்வையால் சனியின் பாதிப்பு இந்த ஆண்டில் உங்களை நெருங்காமல் போகும். நவ.12 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும் சஞ்சரித்து நவ.13 முதல் மகரத்திற்கு ராகுவும், கடகத்திற்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதால் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ.12 வரை அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. எந்த ஒன்றிலும் சரியான நிலவரம் தெரிந்து இறங்குவது அவசியம். வாழ்க்கைத்துணையின் ஆலோசனையை ஏற்பதும், புதிய நட்புகளிடம் கவனமாக இருப்பதும் உங்களுக்கு நன்மையாகும். நவ.13 முதல் ஆறாமிட கேதுவால் முன்னேற்றம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். நோய் நொடி விலகும். செல்வாக்குடன் வாழும் நிலை உண்டாகும். 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நவ.12 வரை ஆறாமிட கேது துணிச்சல், செல்வாக்குடன் நடைபோட வைப்பார். எடுத்த வேலைகள் யாவிலும் வெற்றியை ஏற்படுத்துவார். நவ.13 முதல் லாப ராகுவால் பொருளாதார நிலை உயரும். பணவரவு அதிகரிக்கும். மனதில் நிம்மதி உண்டாகும். மார்ச் 16 வரை மிதுனத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் குரு, மார்ச் 17 முதல் வக்ர நிவர்த்தியாகிறார். தொடர்ந்து மே 26 முதல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிப்பவர், அக்.20 முதல் சிம்மத்திற்கு அதிசாரமாக சஞ்சரிப்பதால், 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 25 வரை தொழில், திருமணம், குழந்தை பாக்கியம், வேலை, வீடு, வாகனம், உயர்கல்வி என விருப்பம் அனைத்தும் நிறைவேறும். மே 26 முதல் வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் நிம்மதியும், பணப்புழக்கமும் இருக்கும். அக்.20 முதல் வருமானம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். எதிர்பார்ப்பு நிறைவேறும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்பு, சுயதொழில், வேலை, வீடு, வாசல், அந்தஸ்து, வருமானம், செல்வாக்கு, பணப்புழக்கம் நிம்மதி என்ற நிலை இருக்கும். பூரட்டாதி 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜன. 1 – 14, ஏப். 14 – மே. 14 காலங்களிலும், ஜூலை 17 – ஆக. 17, நவ. 17 – டிச. 31 காலத்திலும், 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஜன.1 – பிப். 12, மே 15 – ஜூன் 14 காலங்களிலும், ஆக. 18 – செப்.17, டிச. 16 – டிச. 31 காலங்களிலும், சூரியனின் சஞ்சார நிலைகளால் உங்களுக்கு இருந்த சங்கடங்கள் விலகும். முயற்சி வெற்றியாகும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். வியாபாரம், தொழில், வேலையில் இருந்த தடைகள் விலகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். அரசில்வாதிகளுக்குசெல்வாக்கு கூடும். 2026 ம் ஆண்டில் உங்களுக்கிருந்த நெருக்கடி விலகி நன்மை அதிகரிக்கும். குருவின் சஞ்சாரம், பார்வைகள் ஆண்டு முழுவதும் சுபிட்ச நிலையை உண்டாக்கும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். வாழ்வு வளமாகும். அந்தஸ்து உயரும். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். பணியாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். கடந்த ஆண்டில் தடைபட்ட வேலைகள் இப்போது முடிவிற்கு வரும். ஜூவல்லரி, ஜவுளி, நிதி நிறுவனம், இயந்திரத் தொழில், வாகன உற்பத்தி, ஆட்டோ மொபைல்ஸ், ஸ்பேர் பார்ட்ஸ், பேக்டரி, டிராவல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், எக்ஸ்போர்ட், ஆன்லைன் வர்த்தகம் மூலம் லாபம் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு தடைபட்ட வேலைகள் முடிவிற்கு வரும். விரும்பிய இடமாற்றமும், எதிர்பார்த்த பதவி உயர்வும் கிடைக்கும். தனியார் நிறுவன ஊழியர்களுக்கு வேலையில் இருந்த சங்கடங்கள் விலகி நிர்வாகத்தின் ஆதரவு கிடைக்கும். குருவின் சஞ்சாரம், பார்வை ஆண்டு முழுவதும் சாதகமாக இருப்பதால் கனவு நனவாகும். வாழ்க்கைத்துணையின் அன்பு கூடும். திருமணம், மறுமணம், குழந்தை பாக்கியம், வேலை என்பதுடன், பொன் பொருள் சேர்க்கையும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். படிப்பில் அக்கறை செலுத்துவது அவசியம். உயர் கல்வி கனவு நனவாகும். கல்லுாரியில் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்பது நன்மையாகும். உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும். ஆரோக்கியமாக நடை போடும் நிலை உண்டாகும். மருத்துவச்செலவு குறையும். குடும்பத்தில் இருந்து சங்கடம் முடிவிற்கு வரும். தம்பதிக்குள் இணக்கம் ஏற்படும். நீண்டநாள் கனவு நனவாகும். வருமானம் அதிகரிக்கும். கடன் தொல்லை விலகும். சொந்த வீடு, வாகனம், பொன் பொருள் சேரும். சுப நிகழ்ச்சி நடக்கும். பிள்ளைகள் உயர் கல்வி பயில்வர். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். பரிகாரம் : பகவதி அம்மனை வழிபட சங்கடம் விலகும். வேண்டுதல் நிறைவேறும். உத்திரட்டாதி: நெருக்கடி நீங்கும் கர்மக்காரகனான சனி, தன புத்திரக்காரகனான குரு அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, 2026ம் ஆண்டு யோகமான வருடமாக இருக்கும். ஆண்டு முழுவதும் ஞானக்காரகன் கேதுவும், யோகக்காரகன் ராகுவும் நன்மை வழங்க இருப்பதால் உங்களுக்கிருந்த சங்கடங்கள் விலகும். நோய், எதிர்ப்பு, பகை இருந்த இடம் தெரியாமல் போகும். கவலை தீரும். பொருளாதார நிலை உயரும். நினைத்ததை நடத்தி முடிக்கும் நிலை உண்டாகும். மார்ச் 5 வரை விரய சனியாக சஞ்சரிப்பவர் மார்ச் 6 முதல் ஜென்ம சனியாக சஞ்சரிக்க இருப்பதால், உங்களுக்கும் ஜென்மச் சனி என்ற பயம் உண்டாகும். 2026 ல் சனியால் உங்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்பதே உண்மை. மார்ச் 12 – ஏப்.11 வரை சனி அஸ்தமனம், ஜூலை 15 – நவ. 30 வரை வக்ரம் அடைவதால் இக்காலங்களிலும், குருவின் பார்வை மே 26 வரை மீனத்திற்கு உண்டாவதாலும் சனி வழங்கும் பலன்கள் சுப பலனாகவே இருக்கும். ஆனால் சகோதர ஸ்தானமான 3 ம் இடம், களத்திர ஸ்தானமான 7 ம் இடம், தொழில் ஸ்தானமான 10 ம் இடமும் மார்ச் 6 முதல் சனியின் பார்வைக்கு உள்ளாவதால் சகோதரர், வாழ்க்கைத்துணை, தொழில் போன்றவற்றில் எச்சரிக்கை அவசியம். நவ.12 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும் சஞ்சரித்து, நவ.13 முதல் மகரத்தில் ராகுவும் கடகத்தில் கேதுவும் சஞ்சரிக்க இருப்பதால் வாழ்க்கை வளமாகும். கோயில் கோயிலாக போய் வந்தும் எந்த கோரிக்கையும் நிறைவேறவில்லை என வருந்தியவர்களுக்கு நவ. 12 வரை ஆறாமிட கேது துணிச்சல், செல்வாக்கு, அந்தஸ்து, ஆரோக்யம், எடுத்த வேலைகளில் வெற்றி என நடைபோட வைப்பார். நவ.13 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு, பொருளாதார நிலையை உயர்த்துவார். பணவரவை அதிகரிப்பார். நிம்மதியை ஏற்படுத்துவார். பெரியோரின் துணையை உண்டாக்குவார். சந்தோஷமாக வாழ வைப்பார். மார்ச் 16 வரை மிதுனத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் குரு, மார்ச். 17 முதல் வக்ர நிவர்த்தியாகிறார், தொடர்ந்து மே. 26 முதல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிப்பவர், அக். 20 முதல் சிம்மத்திற்கு அதிசாரமாக சென்று சஞ்சரிப்பதால், மே. 25 வரை அதிர்ஷ்ட வாய்ப்புகளை வழங்குவார், புதிய தொழில் தொடங்க மேற்கொள்ளும் முயற்சியை வெற்றியாக்குவார், வேலையில் இருந்த பிரச்னைகளை இல்லாமல் செய்வார். வீடு கட்ட வைப்பார் வருமானம், பணப்புழக்கம், நிம்மதியை உண்டாக்குவார். மே26 முதல் புதிய வீடு, வருமானம், செல்வாக்கு, திருமணம், பட்டம், பதவி என கனவுகளை நனவாக்குவார். அக். 20 முதல் வியாபாரம், தொழில், வேலையில் முன்னேற்றம், குடும்பத்தில் நிம்மதியை ஏற்படுத்துவார் ஜன 1 – பிப்.12, மற்றும் மே. 15 – ஜூன் 14 காலங்களிலும், ஆக. 18 – செப். 17, டிச. 16 – டிச. 31 காலங்களிலும், சூரியனின் சஞ்சார நிலைகள் உங்கள் சங்கடங்களை நீக்கும். முயற்சிகளை வெற்றியாக்கும். செல்வாக்கையும் அந்தஸ்தையும் உயர்த்தும், வியாபாரம், தொழில், வேலையில் முன்னேற்றத்தை உண்டாக்கும். குடும்பம், தொழில், வேலையில் இருந்த நெருக்கடி விலகும். உடல்நிலை சீராகும், வம்பு, வழக்கு என்ற நிலை மாறும். சத்ரு ஜெய ஸ்தான கேதுவாலும், லாப ஸ்தான ராகுவாலும் மீண்டும் வாழ்வு வளமாகும். விருப்பம் நிறைவேறும். செல்வாக்கு உயரும். முயற்சி செய்தும் முன்னேற்றமில்லை,ஆதாயமில்லை, பணியாளர் ஒத்துழைப்பில்லை என்ற நிலை மாறும். நிதி நிறுவனம், ஜூவல்லரி, பங்கு வர்த்தகம், இயந்திரத் தொழில், வாகன உற்பத்தி, ஆட்டோ மொபைல்ஸ், ஸ்பேர் பார்ட்ஸ், டிராவல்ஸ், ஹார்ட்வேர், மென்பொருள், எக்ஸ்போர்ட், ஆன்லைன் வர்த்தகம் மூலம் லாபம் உயரும். பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள், சிறு தொழில் செய்பவர்கள் மதிப்பு உயரும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வேலையில் கவனம் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். தனியார் நிறுவன ஊழியர்கள் மேன்மை அடைவர். திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். சலுகையுடன் சம்பளம் உயரும். அங்கீகாரம் கிடைக்கவில்லை, குடும்பத்திலும் நிம்மதியில்லை, உடல்நிலையும் ஒத்துழைக்கவில்லை என்று சங்கடத்துடன் வாழ்ந்து வருபவர்களுக்கு 2026 ம் ஆண்டு முன்னேற்றமான ஆண்டாகும். நீண்டநாள் கனவு நனவாகும். வீடு, வாசல் என வாழ்வு வளமாகும். பிள்ளைகளை நினைத்து சங்கடப்பட்டு வந்த நிலை மாறும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். உயர் கல்வி, வேலை, திருமணம், மறுமணம், வீடு, வாகனம் என எதிர்பார்ப்பு நிறைவேறும். பொதுத்தேர்வு, போட்டித் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்வி கனவு நனவாகும். ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்பதால் கூடுதல் மதிப்பெண் கிடைக்கும். நோய் நொடி, மருத்துவச் செலவு என்றிருந்த சிரமம் குறையும். உடல் பாதிப்பு விலகும். மீண்டும் ஆரோக்யமாக நடை போடும் நிலை உண்டாகும். கடந்த கால பாதிப்பு, நெருக்கடி விலகும். உங்கள் வாழ்க்கைக்கு புதிய பாதை தெரியும். குடும்பத்தில் சுபிட்ச நிலை இருக்கும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்கும் நிலை உருவாகும். சிலர் சொந்த வீட்டில் குடியேறுவர். சுபநிகழ்ச்சி நடக்கும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். பரிகாரம் : சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் விளக்கு ஏற்ற சங்கடங்கள் தீரும். வித்யா காரகனான புதன், தன புத்திர காரகனான குரு அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, 2026ம் ஆண்டு நினைத்ததை சாதிக்கும் ஆண்டாக இருக்கும். நெருக்கடி விலகும். உங்கள் புத்திசாலித்தனத்தால் தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். அந்தஸ்து உயரும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். பொருளாதாரம் உயரும். மார்ச் 5 வரை விரய சனியாகவும், மார்ச் 6 முதல் ஜென்ம சனியாகவும் சஞ்சரிப்பதால் உங்களுக்குள் ஒருவித பயம் இருக்கும் என்றாலும், 2026 ல் சனி வழங்கும் பாதகப் பலன்கள் கட்டுப்படும், உங்கள் ராசிநாதன் வீட்டில் சஞ்சரிப்பவர் உங்களுக்கு நன்மையே தருவார். மார்ச் 12 – ஏப். 11 வரை சனி அஸ்தமனம், ஜூலை 15 – நவ. 30 வரை வக்ரம் அடைவதால் இக்காலங்களிலும், மே 26 வரை குரு பார்வை மீனத்திற்கு உண்டாவதாலும் சனியால் இந்த ஆண்டு சங்கடம் ஏற்படாது. சகோதர, களத்திர, தொழில் ஸ்தானத்தை மார்ச் 6 முதல் சனி பார்ப்பதால் சகோதரர் வகையில் எதிர்பாராத சங்கடம் ஏற்படலாம். வாழ்க்கைத் துணையின் உடல்நிலை பாதிக்கலாம். இருவருக்கும் கருத்து வேறுபாடு வரலாம். தொழில், வேலையில் நெருக்கடியை சந்திக்கலாம். இந்த நிலையில், அஸ்தமன, வக்கிர காலங்களிலும், சனிக்கு குருப்பார்வை உண்டாகும் நேரத்திலும் மாற்றம் ஏற்படும். நவ.12 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும் சஞ்சரித்து, நவ. 13 முதல் மகரத்தில் ராகுவும் கடகத்தில் கேதுவும் சஞ்சரிக்க இருப்பதால், இந்த ஆண்டு யோகமான ஆண்டாக அமையும். தொழிலில் எதிர்ப்பும் போட்டியும் இருக்காது, உத்தியோகத்தில் நெருக்கடி இருக்காது, வரவேண்டிய பணம் வரும். விருப்பம் நிறைவேறும். மகிழ்ச்சி அதிகரிக்கும். நினைத்ததை சாதிக்கும் அளவிற்கு வெற்றி நடை போடுவீர்கள். மார்ச் 16 வரை மிதுனத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் குரு, மார்ச் 17 முதல் வக்ர நிவர்த்தியாகிறார். தொடர்ந்து மே 26 முதல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிப்பவர், அக்.20 முதல் சிம்மத்திற்கு அதிசாரமாக சஞ்சரிப்பதால் மே 25 வரை தன் பார்வைகளால் முன்னேற்றத்தை உண்டாக்குவார். பணவரவை அதிகரிப்பார். தொழிலில் லாபம், வேலையில் நிம்மதியை உண்டாக்குவார். வீடு, வாசல், பணம், புகழோடு வாழ வைப்பார். மே 26 முதல் பஞ்சம ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரிப்பவர் உங்கள் நிலையை மேலும் உயர்த்துவார். திருமணம், பட்டம், பதவி என கனவுகளை நனவாக்குவார். அக். 20 முதல் தன் பார்வைகளால் வியாபாரம், தொழில், வேலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். பணப்புழக்கத்தை அதிகரிப்பார். ஜன.1 – பிப். 12, மே 15 – ஜூன் 14 காலங்களிலும், ஆக.18 – செப்.17, டிச.16 – டிச.31 காலங்களிலும், சூரியன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் முயற்சி நிறைவேறும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். எதிர்ப்பு, நோய், பகை மாறும். வழக்கு சாதகமாகும். வாழ்க்கை வளமாகும். தொழில் லாபம் தரும். வேலையில் நிம்மதி இருக்கும். 2026 ம் ஆண்டு உங்களுக்கு முன்னேற்றமான ஆண்டு. வெறும் கனவாகவே இருந்தவை நனவாகும். எதிர்பார்த்தும் கிடைக்காமல் போனது கிடைக்கும். குடும்பம், தொழில் முன்னேற்றம் அடையும். உடல் பாதிப்பு மறையும். வேலை, தொழில், வீடு வாசல் என்ற கனவுகள் நனவாகும். போட்டியாளர்களால் ஏற்பட்ட பிரச்னை, நெருக்கடி விலகும். கிரக சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் தொழில் முன்னேற்றம் தரும். புதிய தொழில் தொடங்க வாய்ப்பு உண்டாகும். பங்கு வர்த்தகம், எக்ஸ்போர்ட், பைனான்ஸ், ஜுவல்லரி, ரியல் எஸ்டேட், பதிப்பகம், அச்சகம், செய்திதாள், பள்ளிக்கூடங்கள், ஆன்லைன் வர்த்தகம், விவசாயம் நல்ல முன்னேற்றம் அடையும். நிர்வாகத்துடன் இணக்கம் உண்டாகும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வேலையில் நிம்மதி உண்டாகும். அரசு பணியாளர்களுக்கு தடைபட்ட இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரியின் ஆதரவு உண்டாகும். இந்த ஆண்டு யோகமான ஆண்டாக இருக்கும். நினைத்தது நடந்தேறும். உயர்கல்வி, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் என அவரவர் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வேலையில் எதிர்பார்த்த உயர்வு ஏற்படும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு மதிப்புண்டாகும். வாழ்க்கைத்துணையை இழந்த, பிரிந்தவர்களுக்கு மறுமணம் நடக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். சுய தொழில் செய்பவர்களுக்கு ஆதாயம் கூடும். பொன், பொருள் ஆடை, ஆபரணம் சேரும். படிப்பின் அவசியத்தை உணர்ந்து தேர்விற்கு தயாராவீர்கள். போட்டித் தேர்விலும் பங்கேற்பீர்கள். எதிர்பார்த்த கல்லுாரியில் விரும்பிய பாடம் கிடைக்கும். சிலர் வெளி மாநிலம், வெளிநாடு செல்வர். ஆசிரியர்கள் ஆலோசனை கனவை நனவாக்கும். உடல்பாதிப்பு விலகும். மருத்துவச்செலவு குறையும். மருத்துவமனை மருத்துவமனையாக ஏறி இறங்கி வந்தவர்கள் நிம்மதி காண்பர். நரம்புக்கோளாறு, ரத்தக்குழாய் அடைப்பு, சுவாச பிரச்னை, தொற்றுநோய், பரம்பரை நோய் என சங்கடப்பட்டு வந்தவர்கள் குணமடைவர். மனம், உடல் பலத்துடன் இருப்பீர்கள். ராகு கேது சஞ்சாரம், குரு சஞ்சாரம், அதன் பார்வைகள் உங்களை உச்சத்திற்கு கொண்டு செல்லும். கேள்விக்குறியாக இருந்த உங்கள் வாழ்க்கை ஆச்சரியக் குறியாக மாறும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும். புதிய இடம் வீடு, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றி தரும். பிள்ளைகளின் நலனில் அக்கறை கூடும். சுபநிகழ்ச்சி நடக்கும். கணவன், மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்கும் நிலை உண்டாகும். எதிர்கால நல்ல வாழ்க்கைக்கு புதிய பாதை தெரியும். பரிகாரம்: அண்ணாமலையாரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும். வேண்டுதல் நிறைவேறும்.
|