கோவை கவுமார மடலாயத்தில் ராமனந்த அடிகளின் குரு பூஜை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜன 2026 04:01
கோவை; கோவை கவுமார மடலாயத்தில் ராமனந்த அடிகளின் 69வது குரு பூஜை விழா இன்று நடந்தது.
சின்னவேடம்பட்டியில் உள்ள சிரவையாதீன ஆதிகுரு ராமனந்த சாமிகளின் 69வது ஆண்டு நிறைவு குரு பூஜை விழா இன்று துவங்கியது. காலை 9.00 மணிக்கு மங்கல இசையுடன் துவங்கிய நிகழ்ச்சியை சிரவை ஆதீன நாதஸ்வர கலைஞர்கள் நடத்தினர். திருப்புகழ் இன்னிசையை அன்னுார் அரங்கசாமி, மடாலய பள்ளி குழந்தைகள் நிகழ்த்தினர். வாவிபாளையம் அனந்தகிருஷ்ணன், மதுரை, முருகவேல் பன்னிரு திருமுறை ஆய்வு மையத்தின் பேச்சாளர் சிவதனுஷ் சொற்பொழிவு ஆற்றினர்.
தொடர்ந்து மாலையில் கண்கட்டி வித்தை, நாட்டிய நாடகம், பெருஞ்சலங்கை ஆட்டம், சிறப்பு இன்னிசை போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. நிறைவு நாள் நிகழ்ச்சியாக நாமை குருபூஜை விழா நடக்கிறது. நிகழ்ச்சிக்கு கல்லுாரி கல்வி முன்னாள் இயக்குனர் குமாரசாமி வரவேற்கிறார். சிரவையாதீனம் குமரகுருபர சாமிகள் தலைமை வகிக்கிறார். 14 சுவடி பதிப்பு நுால்கள் வெளியீட்டு விழா நடக்கிறது. பேருராதீனம் மருதாசல அடிகள் நுால்களை வெளியீடுகிறார். பழனி சாதுசண்முக அடிகள், மவுன சிவாச்சல அடிகள், தென்சேரி மலை முத்து சிவராம அடிகள் உள்ளிட்டோர் நுால்களை பெறுகின்றனர். சிறப்பு விருதுகளை அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, அவிநாசிலிங்கம் பல்கலை முன்னாள் துணைவேந்தர் குழந்தைவேல் உள்ளிட்டோர் பெறுகின்றனர். மாலையில் ரத ஊர்வல நிகழ்ச்சி நடக்கிறது.