சேலம்: வைகுண்ட ஏகாதசியை ஒட்டி, சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு, கடந்த டிச., 30ல் நடந்தது. அன்று முதல், ராப்பத்து உற்சவம் தொடங்கி நடந்து வருகிறது. அதன், 8ம் நாளான நேற்று, கொள்ளைக்காரனாக இருந்த திரு-மங்கை மன்னனை திருத்தி ஆட்கொண்ட பெருமாளின் லீலையை போற்றும்படி, இரவு, 7:00 மணிக்கு, ஒருவர் உடல் முழுதும், 12 திருநாமங்கள் இட்டு, பெருமாளின் தங்க ஆபர-ணங்கள் உள்ள பெட்டியை திருடிச்செல்வது போன்றும், அவனை பிடிக்க பெருமாளே குதிரை வாகனத்தில் எழுந்தருளி விரட்டிச்-சென்று பிடித்து ஆட்கொண்ட லீலையை நடித்து காட்டினர். இந்த உற்சவம் சேலம் வாழ் சவுராஷ்டிரா சமூக மக்களால் நடத்-தப்பட்டது. இதில் வழிபட்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்-பட்டது. ஏற்பாடுகளை கோவில் பட்டாச்சாரியார்கள், கட்டளை உற்சவதாரர்கள் செய்திருந்தனர். அதேபோல் அம்மாபேட்டை சவுந்தரராஜர் கோவிலில் வேடுபறி உற்சவம் நடந்தது.