12 ஜோதிர் லிங்க தரிசனம் செய்ய 18,000 கி.மீ., நடைபயணம் செல்லும் மேற்குவங்க இளைஞர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜன 2026 12:01
ராமநாதபுரம்: மேற்கு வங்க மாநிலம் புர்பா மெதினிபூர் மாவட்டம் ஹல்டியா பகுதியை சேர்ந்தவர் அபிஜித் தாஸ் 25.
இவர் சனாதன தர்மம், தேசியம், தெய் வீகத்தை வலியுறுத்தி தேசியக் கொடியுடன் நேபாளம் துவங்கி உத்தரகண்ட் வரை ஹிந்து கோயில்களுக்கு 18,000 கி.மீ., 6 மாத நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
நேற்று ராமேஸ்வரம் கோயிலில் தரிசனம் முடித்து ராமநாதபுரம் வந்த அபிஜித் தாசுக்கு பொதுமக்கள் வரவேற் பளித்தனர்.
அவர் கூறியதாவது: நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். 12 ஜோதிர் லிங்கங்களை தரிசனம் செய்ய வேண்டும் என்பது சிறு வயது கனவு. பெற்றோர், உறவினர் உதவி யுடன் சனாதன தர்மம், தேசியம், தெய்வீகத்தை வலியுறுத்தி தேசியக்கொடி யுடன் 2025 ஜூன் 18ல் நேபாளம் பசுபதிநாதர் கோயிலில் எனது நடை பயணத்தை துவக்கினேன். ஸ்ரீசைலம், ஆந்திராவில் மல்லிகார்ஜுனா, திருப்பதி, தமிழகத்தில் திருச்சி ரங்கநாதர் கோயில், மலைக்கோட்டை சென்றேன். நேற்று ராமேஸ் வரத்தில் தரிசனம் முடித்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு செல்கிறேன். கோவை ஆதியோகி சிவன் கோயில் சென்று விட்டு தொடர்ந்து நடைபயணம் மேற்கொண்டு இன்னும் (பிப்.,) ஒரு மாதத்தில் உத்தரகண்ட் மாநிலம் பத்ரி நாத் கோயிலில் நடை பயணத்தை நிறைவு செய்ய உள்ளேன். செல்லும் வழியில் சனாதன தர்மத்தை வலியுறுத்தி வருகிறேன், ஓம் நமச்சிவாயா எனக் கூறிவிட்டு நடை பயணத்தை தொடர்ந்தார்.