வால்பாறை முத்துமாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜன 2026 11:01
வால்பாறை: வால்பாறை, கெஜமுடி எஸ்டேட் பகுதியில் பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
வால்பாறை அடுத்துள்ளது கெஜமுடி எஸ்டேட் முதல் பிரிவு. இங்குள்ள, முத்துமாரியம்மன் கோவிலின், 89ம் ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜையும், 7:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜையும் நடந்தது. காலை, 8:30 மணிக்கு எஸ்டேட் சீனியர் மேலாளர் தருண்திம்பையா கொடியேற்றினார். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. வரும், 16ம் தேதி வரை நடைபெறும் பொங்கல் திருவிழாவில் பக்தர்கள் முளைப்பாரி எடுத்தும், தீ சட்டி எந்தியும், பொங்கல் வைத்தும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.