மேட்டுப்பாளையம் ஐயப்பன் கோயிலில் பரத நாட்டிய நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜன 2026 03:01
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் ஐயப்பன் கோயில், மகோற்சவம் விழாவில், மாணவிகளின் பரத நாட்டியம் நடந்தது.
மேட்டுப்பாளையம் காரமடை சாலை, சிவன்புரத்தில் ஐயப்பன் கோயில் உள்ளது. இக்கோயிலில், 35வது மண்டல மகோற்சவ நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் ஐயப்பன் சுவாமிக்கு, சுற்று விளக்கு, திருவிளக்கு வழிபாடு, நிறைமாலை, புஷ்பாபிஷேகம் ஆகிய வழிபாடுகளும், சிறப்பு பூஜைகளும் நடந்தன. இரவு ஸ்ரீபதம் கலாசேத்திரா நாட்டிய பள்ளி மாணவிகளின், பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், 25க்கும் மேற்பட்ட மாணவிகள் நடனம் ஆடினர். இந்த மாணவிகளுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு டி.ஆர்.எஸ்., பிராப்ரட்டீ டெவலப்பர்ஸ் நிர்வாகி சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை ஐயப்ப சேவா சமிதியின் தலைவர் அச்சுதன் குட்டி, செயலாளர் சத்தியநாதன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.