பதிவு செய்த நாள்
05
ஜன
2013
10:01
வாஷிங்டன்: அமெரிக்காவின், ஹவாய் பகுதியை சேர்ந்த, துளசி கபார்டு, பகவத் கீதையை படித்து, எம்.பி.,யாக பதவி ஏற்றுக்கொண்டார். அமெரிக்காவில், நவம்பரில் நடந்த தேர்தலில், ஹவாய் பகுதியிலிருந்து, ஜனநாயக கட்சி சார்பில் துளசி கபார்டு,31, பிரதிநிதிகள் சபைக்கு தேர்வு செய்யப்பட்டார். புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்கள், நேற்று முன்தினம், எம்.பி.,க்களாக பதவி ஏற்றனர். துளசி கபார்டு, இந்தியர் அல்ல. இவருடைய தந்தை, மைக் கபார்டு, தற்போது செனட்டராக உள்ளார். இவரது தாய் கரோல் போர்டர், கல்வி அதிகாரியாக உள்ளார். அமெரிக்க பிரதிநிதிகள் சபை சபாநாயகர், ஜான் போனர், புதிய உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அப்போது துளசி கபார்டு, பகவத் கீதையை படித்து, உறுதி மொழி ஏற்றார்.
இது குறித்து துளசி கூறியதாவது:
என் தாய் இந்து. தந்தை கிறிஸ்துவர்: பகவத் கீதை, மன அமைதியை தருவது. வாழ்க்கையின் இக்கட்டான தருணங்களில், நமக்கு வழிகாட்டுவது. இளம் பருவத்திலேயே, பகவத் கீதை எனக்கு கற்பிக்கப்பட்டது. என் தாய் இந்து. தந்தை கத்தோலிக்க கிறிஸ்துவராக இருந்தாலும், அவரும் மந்திர ஜபம் செய்கிறார். இதனால், தான் எனக்கு, இந்து மதத்தில் ஆர்வம் ஏற்பட்டது. இந்துவாக இருப்பதில் பெருமைப்படுகிறேன். இவ்வாறு துளசி கூறினார்.