காணும் பொங்கல்: திருத்தணியில் முருகன் வீதியுலா
பதிவு செய்த நாள்
18
ஜன 2026 12:01
திருத்தணி: காணும் பொங்கல் விழாவையொட்டி, உற்சவர் முருகன், வள்ளி – தெய்வானையுடன் திருத்தணி நகர வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஒவ்வொரு ஆண்டுதோறு ம் காணும் பொங்கல் விழா அன்று, உற்சவர் முருகன், திருத்தணி நகரில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். நேற்று காலை திருத்தணி உற் சவர் முருகன், வ ள்ளி – தெய்வானைக்கு பாதாம், முந்திரி, ஏலக்காய், குருவிவேர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின், அங்கிருந்து உற்சவர் முருகன், காலை 8:00 மணிக்கு மாட்டு வண்டியில் நகரம் முழுது ம் வீதியுலா சென்றார். மாலை 5:30 மணிக்கு பழைய பஜார் தெரு அருகில் உள்ள ரெட்டிகுளம் எனு ம் சண்முகதீர்த்தக்குளம் மண்டபத்தில், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு 8:30 மணிக்கு உற்சவர் முருகன், மீண்டும் மலைக்கோவிலுக்கு சென் றார். அதேபோல், பெரியபாளையம் பவானியம்மன் கோவில், சுருட்டப்பள்ளி சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ் வர சுவாமி கோவில் உள்ளிட்ட பழமையான கோவில்களில், பக்தர்கள் குடும்பத்துடன் சென்று தரிசனம் செய்தனர். 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் காணும் பொங்கல் விழாவையொட்டி, முருகன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால், பொதுவழியில் நான்கு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். மேலும், 100 ரூபாய் தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், இரண்டு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். ஆட்டோக்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் மலைப்பாதையில் செல்வதற்கு அனுமதி இல்லாததால், கோவில் நிர்வாகம் சார்பில், 10 சிறப்பு பேருந்துகள் மலைக்கோவிலுக்கு இயக்கப்பட்டன. 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
|