உத்தமபாளையம் அருகில் உள்ள அம்மாபட்டியில் பிரசித்தி பெற்றதும் புராதானமானதுமான மூங்கில் அன்னை காமாட்சியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் ராஜகோபுரம் திருப்பணிகள் இக் கோயில் சேவை அறக்கட்டளை தலைவர் பொன் கனகராஜ் தலைமையில் துவங்கியது. முன்னதாக காலையில் கோ பூஜையுடன் நிகழ்ச்சி துவங்கியது. சுமங்கலி பூஜை, கன்யா பூஜை, தம்பதிகள் பூஜை, பூமி பூஜை, பெருமாள் பூஜைகள் நடந்தது. இன்று காலை இராஜ கோபுரம் திருப்பணிகளுக்கான சிறப்பு பூஜை, வாஸ்து பூஜையும் நடந்தது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. நிலக்கோட்டை சிவாச்சாரியார் ராஜாமணி பூமி பூஜை செய்தார். நிகழ்ச்சியில் கம்பம், புதுப்பட்டி, சிலமலை, ஓடைப்பட்டி, உத்தமபாளையம் பகுதி பொதுமக்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சேவை அறக்கட்டளை செயலாளர் கர்ணன், செயல் தலைவர் பொன் சுருளி முத்து, இளைஞர் அணி தலைவர் பாலமுருகன், மூத்த உறுப்பினர் நாராயணசாமி ஆகியோர் செய்திருந்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சேவை அறக்கட்டளை, ராஜகோபுரம் திருப்பணிக்குழு, நவராத்திரி விழா பெண்கள் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.