பட்டிவீரன்பட்டி; முத்துலாபுரம் ஆயிரம் அரிவாள் கருப்பணசுவாமி கோயில் திருவிழா நடந்தது. ஆண்டுதோறும் தை மாதம் நடைபெறும் இவ்விழாவில் நேர்த்திக்கடன் வேண்டிக் கொண்ட பக்தர்கள் காரியம் நிறைவேறியதும் கருப்பண சுவாமிக்கு அவரவர் வசதிக்கேற்ப ஒன்றரை அடி முதல் 50 அடி வரை அரிவாள் செய்து காணிக்கையாக செலுத்தினர். இதற்கு பூஜை செய்யப்பட்டு கருப்பண்ணசுவாமிக்கு பட்டு உடுத்தி பூஜைகள் நடத்த ஊர்வலமாக அரிவாள்கள் கொண்டு செல்லப்பட்டு கோயிலில் ஒப்படைக்கப்பட்டது. இதையொட்டி பொங்கல் வைத்து கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும் நடந்தது.