Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாம்புகளின் கடவுளுக்கு ... துமகூரில் தரிசிக்க வேண்டிய 3 கோவில்கள் துமகூரில் தரிசிக்க வேண்டிய 3 ...
முதல் பக்கம் » துளிகள்
ராமரும் – ஹனுமனும் சந்தித்த இடம்
எழுத்தின் அளவு:
ராமரும் – ஹனுமனும் சந்தித்த இடம்

பதிவு செய்த நாள்

03 பிப்
2026
02:02

விஜயநகரா மாவட்டம், ஹம்பியில் உள்ள விருபாக் ஷா கோவில் மிகவும் பிரபலமான தலம். இந்த கோவிலில் இருந்து 2 கி.மீ., துாரத்தில் யந்த்ரோதாரகா ஹனுமன் கோவில் உள்ளது. சில புராண கதைகள் கடவுள் ராமரும் – ஹனுமனும் முதன்முதலில் இங்கு தான் சந்தித்தனர் என்று கூறுகிறது.


வேறு சில வரலாறுகள், மன்னர் ஸ்ரீவியாசராஜா, கோவில் அமைந்துள்ள இடத்தில் உள்ள பாறைகள் மீது, ஹனுமன் உருவத்தை தினமும் வரைந்து, பிரார்த்தனை செய்ததாகவும், அவரது பிரார்த்தனை முடிய போகும் நேரத்தில் ஹனுமன் உருவம் மறைந்து போகும் என்றும், ஹனுமனிடம் தன் முன்பு தோன்றுமாறு அவர் கெஞ்சியதால், ஹனுமன் கடவுளாக தோன்றியதாகவும் கூறப்படுகிறது.


துங்கபத்ரா ஆற்றின் கரையோரம் அமைந்து உள்ள இந்த கோவிலில், கருவறையில் அறுகோண தாயத்திற்குள் அமைக்கப்பட்ட நிலையில் ஹனுமன் சிலை உள்ளது. ஹம்பியில் உள்ள மற்ற ஹனுமன் கோவில்களில், அவர் ஒரு கை உயர்த்தி, இன்னொரு கையை இடுப்பில் வைத்திருப்பது போன்று சிற்பம் செதுக்கப்பட்டு உள்ளது. ஆனால், இந்த கோவிலிலில் மட்டும் ஹனுமன் பிரார்த்தனை நிலையில் இருப்பது போன்று, பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.


ஹனுமன் தாயத்தை சுற்றி 12 குரங்குகளின் சிற்பங்கள் செதுக்கப்பட்டு உள்ளன. அவை, மன்னர் வியாசராஜா, ஹனுமனை வழிபட்ட 12 நாட்களை குறிக்கின்றன. அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு 100 படிக்கட்டுகளில் ஏறி செல்ல வேண்டும். தினமும் காலை 6:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையும்; மதியம் 3:00 மணி முதல் மாலை 6:00 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும்.


எப்படி செல்வது?


பெங்களூரில் இருந்து ஹம்பி 350 கி.மீ., துாரத்தில் உள்ளது. மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து ஹம்பிக்கு நேரடி பஸ் வசதி உள்ளது. ரயிலில் செல்வோர் ஹொஸ்பேட் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 13 கி.மீ., துாரத்தில் உள்ள ஹம்பிக்கு, வாடகை கார், ஆட்டோக்களில் செல்லலாம்.

 
மேலும் துளிகள் »
temple news
நம் அடையாளமான திருநீறு, திருமண் அணிய கூச்சப்படக் கூடாது. தினமும் கோயில் வழிபாடு செய்யுங்கள்.  ... மேலும்
 
temple news
கர்நாடகாவின் முக்கிய நகரங்களில் ஒன்று துமகூரு. இது, ஆன்மிகம் மற்றும் பாரம்பரியம் இரண்டும் கலந்த ... மேலும்
 
temple news
சிக்கபல்லாபூர் மாவட்டம், கவுரிபிதனுார் தாலுகா ஹலகனஹள்ளி கிராமத்தில், பிரசித்தி பெற்ற விதுராஷ்வதா ... மேலும்
 
temple news
மைசூரு என்றவுடன் சாமுண்டி மலை மற்றும் அங்குள்ள சாமுண்டீஸ்வரி கோவிலும், நம் கண் முன்னே தோன்றும். இந்த ... மேலும்
 
temple news
முருகப் பெருமானுக்குரிய சிறப்பான விரதங்களில் ஒன்று சஷ்டி. சஷ்டி விரதம் இருந்து வழிபட குறைகள் யாவும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar