தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் மாசி மஹா சிவராத்திரி திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனை வழிபட்டனர்.
தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயிலில் பிப்., 15 முதல் மாசி மஹா சிவராத்திரி திருவிழா துவங்கியது.
தமிழகத்தில் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.
நேற்று 7 ம் நாள் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனை வழிபட்டனர். பக்தர்கள் சிலர் கரும்பு தொட்டிலில் குழந்தையை உட்காரவைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று (பிப்.22) 8 ம் திருவிழாவுடன் நிறைவு பெறுகிறது.
குடிநீர் வசதி கோயில் பிரகாரம் வழியாக ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று அம்மனை வழிபட்டு வருகின்றனர். பகலில் வெயில் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் குடிநீர் வசதி இல்லை என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக கோயில் நிர்வாகம் சார்பில் குடிநீர் வசதி செய்யப் பட்டது.