Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருச்சிகம் : சனிப்பெயர்ச்சி பலன் 2026 - ... மகரம் : சனிப்பெயர்ச்சி பலன் 2026 - 2028 மகரம் : சனிப்பெயர்ச்சி பலன் 2026 - 2028
முதல் பக்கம் » சனிப்பெயர்ச்சி பலன்! (6.3.2026 முதல் 24.4.2028 வரை)
தனுசு : சனிப்பெயர்ச்சி பலன் 2026 - 2028
எழுத்தின் அளவு:
தனுசு : சனிப்பெயர்ச்சி பலன் 2026 - 2028

பதிவு செய்த நாள்

04 மார்
2026
11:03

மூலம் எச்சரிக்கை அவசியம்


ஞான மோட்ச காரகன் கேது, ஞானக்காரகன் குரு அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, கடந்த இரண்டரை ஆண்டுகளாக முன்னேற்றமான  பலன்களை வழங்கிவந்த சனி பகவான், மார்ச். 6, 2026 முதல் உங்கள் ராசிக்கு 4ம் இடமான சுக ஸ்தானத்தில் அர்த்தாஷ்டம சனியாக சஞ்சரிக்கப்போகிறார். இக்காலத்தில் சனி பகவான் உங்கள் ராசியையும், 6 மற்றும் 10ம் இடங்களையும் பார்த்திடுவார் என்பதால், வேகமாக செயல்பட்டு நினைத்ததை எல்லாம் சாதித்துவந்த உங்களிடம் மந்தமான நிலை உண்டாகும். எடுக்கும் வேலைகளில் தடைகளையும் சோதனைகளையும் நெருக்கடிகளையும் சந்திக்க வேண்டியதாக இருக்கும். குடும்பத்திலும் வீண் விரோதம் சங்கடம் என்று ஏற்படும். உடல் ரீதியாகவும் பாதிப்பு உருவாகும். தாயாரின் உடல்நிலையில் எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும். தாய்வழி உறவுகளுடனும் விரோதம் ஏற்படும். வீடு, சொத்து வாகனத்தால் தொல்லைகள் தோன்றும், செய்துவரும் தொழிலில் நெருக்கடி அதிகரிக்கும், பார்த்துவரும் வேலையில் பிரச்சனைகள் உருவாகும். எடுத்த வேலைகளை முடிக்க முடியாத அளவிற்கு சூழ்நிலைகள் உங்களுக்கு எதிராக மாறும் என்றாலும் எதிர்ப்பு, போட்டி, வம்பு, வழக்கு போன்றவற்றில் உங்களுக்கு சாதகமான நிலை உருவாகும். 
இந்த நேரத்தில் உங்கள் சுய ஜாதகம் பலமாக இருந்தாலும், நடக்கும் திசா புத்தி சாதகமாக இருந்தாலும் எந்தவிதமான சங்கடங்களும் உங்களை நெருங்காமல் போகும்.

பலன்களில் மாற்றம்
சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்குச் செல்வதால் இக்காலத்தில் அர்த்தாஷ்டம சனியின் பாதிப்பிலிருந்து விடுபடுவீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நீண்ட நாட்களாக இருந்த சங்கடங்கள் முடிவிற்குவரும். பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். தொழில் உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும்.

ராகு - கேது சஞ்சாரம்  நவ.13, 2026 வரை சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவும், பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவும் உங்களைத் தலைநிமிர்ந்து நடைபோட வைப்பர். செல்வாக்கையும் அந்தஸ்தையும் உயர்த்துவர். சமூகத்தில் உங்களுக்கென்று ஒரு இடத்தையும் அடையாளத்தையும் உருவாக்கித்தருவர். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். வியாபாரம், தொழில் லாபம்தரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும்.

குரு சஞ்சாரம்
குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 -  ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சார நிலைகள் காரணமாக, மிதுனம் மற்றும் சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். கேள்விக்குறியாக இருந்தவர்கள் எல்லாம் மற்றவர்கள் பார்த்து பிரமிக்கும் வகையில் ஆச்சரியக்குறியாக மாறுவீர்கள். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்யம், வீடு, வாகனம் என்ற கனவுகள் நனவாகும். கடகம், கன்னியில் சஞ்சரிக்கும் காலங்களில் நான்காமிட சனியாலும் அவருடைய பார்வைகளாலும் ஏற்படும் சங்கடங்கள் விலகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

பொதுப்பலன் 
சகாய ராகு, சப்தம, பாக்ய குரு உங்களுக்கு சாதகமாக சஞ்சரிப்பதுடன், கடகம், கன்னி குருவின் பார்வைகள் சனி பகவானுக்கு கிடைப்பதாலும் சங்கடங்களும் நெருக்கடிகளும் உங்களை நெருங்காமல் போகும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். முயற்சிகள் வெற்றியளிக்கும். தொழில் லாபம்தரும். உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.

தொழில்
தொழில்காரகனான சனி பகவான் சுக ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியையும் பார்ப்பதால் ஒவ்வொரு அடியையும் நிதானமாக எடுத்து வைக்க வேண்டும். பிறரை நம்பி உங்கள் நிர்வாகத்தையோ வேலைகளையோ இந்த நேரத்தில் ஒப்படைக்க வேண்டாம். எதுவாக இருந்தாலும் அதை உங்கள் நேரடி கண்காணிப்பில் நடத்திக்கொள்வது நன்மை அளிக்கும். மருத்துவம், ஆன்மீகம் சார்ந்த பொருட்கள், நிதி நிறுவனம், எக்ஸ்போர்ட்,  ஜூவல்லரி தொழில்கள் முன்னேற்றம் அடையும். வழக்கறிஞர், நீதிபதி, ஆசிரியர், அமைச்சர்கள், ஆன்மீகப் பணியாளர்கள், மருத்துவர்கள், புரோகிதர்கள் செல்வாக்கு உயரும்.

பணியாளர்கள்
தொழில் காரகனான சனிபகவான் உங்கள் ராசியையும் ஜீவன ஸ்தானத்தையும் பார்ப்பதால் பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும். நிர்வாகத்துடன் இணக்கமற்ற நிலை உண்டாகும். சிலர் இருக்கும் வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்கு முயற்சி செய்வீர்கள். அரசு பணியாளர்கள் மேல் அதிகாரியை அனுசரித்துச்செல்வதும் தங்கள் பொறுப்புணர்ந்து செயல்படுவதும் இக்காலத்தில் நன்மையளிக்கும். எதிர்பார்த்த இட மாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும்.

பெண்கள்
படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்ற கனவுகள் நனவாகும். குடும்பத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் அன்பு கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமைக்கு மதிப்புண்டாகும். அதே நேரத்தில் கடுமையான உழைப்பின் காரணமாக உடல் நிலையில் சங்கடங்களையும் சந்திக்க வேண்டியதாக இருக்கும் என்பதால் இந்த நேரத்தில் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.

கல்வி
படிப்பில் அக்கறை அதிகரிக்கும். ஆசிரியர்கள் ஆலோசனைகளை ஏற்பீர்கள். பொதுத்தேர்வு, போட்டித்தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய கல்லூரியில் விருப்பப்பட்ட பாடப்பிரிவில் சேர்வீர்கள்.

உடல்நிலை ஆயுள்காரகன் சனி பகவானின் பார்வை ராசிக்கு உண்டாவதால் நோய் நொடிகளால் சங்கடப்பட வேண்டியதாக இருக்கும் என்ற பயம் வேண்டாம், உங்கள் ராசிக்கு ருண ரோக ஸ்தானமான ஆறாம் இடத்தை சனி பார்ப்பதால் வந்த நோய்களும், வரும் நோய்களும் மருத்துவத்திற்கு கட்டுப்படும். ஆரோக்கியமாக செயல்படுவீர்கள்.

குடும்பம் 
ராசிநாதன் குருவின் சஞ்சாரங்களும் பார்வைகளும் உங்களை உயர்வடைய வைக்கும். வசதி வாய்ப்புகளை அதிகரிக்கும். நீண்டநாள் கனவுகளை நனவாக்கும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் அனுசரித்துச்செல்வீர்கள். புதிய இடம், வீடு, வாகனம், பொன், பொருள் என்ற விருப்பம் நிறைவேறும். பிள்ளைகள் நலனில் அக்கறை உண்டாகும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

பரிகாரம் :மணக்குள விநாயகரை வழிபட மனக்கவலை நீங்கும். வாழ்வில் நன்மைகள் உண்டாகும்.


பூராடம்: குறை தீர்ப்பார் குரு


அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன், ஞானக்காரகன் குரு அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, சூழ்நிலை அறிந்து செயல்படக்கூடிய திறமை இருக்கும். உங்கள் ராசிக்கு குடும்பாதிபதியும், சகாய ஸ்தானாதிபதியுமான சனி பகவான் கடந்த இரண்டரை ஆண்டுகளாக சகாய ஸ்தானத்திலேயே ஆட்சியாக சஞ்சரித்து உங்களை வேகமாக நடைபோட வைத்தார். விவேகமாக செயல்பட வைத்தார். வெற்றிக் கோட்டில் உங்களை நிற்க வைத்தார். இந்த நிலையில்  மார்ச். 6, 2026 முதல் உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான மீன ராசியில் அர்த்தாஷ்டம சனியாக சஞ்சரிக்கப் போகிறார். சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் உங்கள் ராசியையும், ராசிக்கு 6 மற்றும் 10ம் இடங்களையும் பார்ப்பார் என்பதால்,
உங்கள் செயல்பாடுகளில் ஒரு மந்தநிலை ஏற்படும். எல்லாவற்றையும் எளிதாக அடைந்து வந்த உங்களுக்கு அர்த்தாஷ்டம சனிக்காலமான இக்காலத்தில் ஒவ்வொன்றிலும் தடை, தாமதம், உழைப்பு, அலைச்சல் என்று ஏற்படும். ஒவ்வொன்றையும் போராடி முடிக்க வேண்டியதாக இருக்கும். தாயாரின் உடல்நிலைக்குறித்து திடீர் அச்சம் ஏற்படும்.  உங்கள் ஆரோக்கியத்திலும் அவ்வப்போது ஒரு எச்சரிக்கை மணி அடிக்கும். வீடு சொத்து வாகனங்களால் செலவுகள் சங்கடங்கள் ஏற்படும். சிலர் சட்டப் பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டிவரும். மனதில் தேவையற்ற குழப்பம் உண்டாகும் குடும்பத்திலும் நிம்மதியற்ற நிலை ஏற்படும்.
இந்த நேரத்தில் உங்கள் சுய ஜாதகம் பலமாக இருந்தாலும், நடக்கும் திசா புத்தி சாதகமாக இருந்தாலும் அர்த்தாஷ்டம சனியின் சங்கடங்கள் உங்களை நெருங்காமல் போகும்.

பலன்களில் மாற்றம்
சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்குச் செல்வதால் இக்காலத்தில் உங்களுக்கேற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். செய்துவரும் தொழில் முன்னேற்றமடையும். தடைபட்ட வேலைகள் முடிவிற்கு வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

ராகு - கேது சஞ்சாரம்  நவ.13, 2026 வரை சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு, பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது உங்கள் செல்வாக்கை உயர்த்துவர். கடினமான வேலைகளையும் நடத்தி ஆதாயம் காணும்படி செய்வர். தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவர். வருமானத்தை அதிகரிப்பர். எடுக்கும் வேலைகளில் வெற்றிகளையும் வழங்குவர்.

குரு சஞ்சாரம்
குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 -  ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சார நிலைகள் காரணமாக, ஏழாம் இடமான மிதுனத்திலும், பாக்ய ஸ்தானமான சிம்மத்திலும் சஞ்சரிக்கும் காலங்களில் செல்வாக்கையும் அந்தஸ்தையும் உயர்த்துவார். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்யம், வீடு, வாகனம், பட்டம், பதவி என்ற கனவுகளை நனவாக்குவார். கடகம், கன்னியில் சஞ்சரிக்கும் காலங்களில் நான்காமிட சனியாலும் அவருடைய பார்வைகளாலும் ஏற்படும் சங்கடங்களை விலக்குவார். குடும்பத்தில் நிம்மதியை ஏற்படுத்துவார். பணப்புழக்கத்தை அதிகரிப்பார். வழக்கு விவகாரங்களை வெற்றியாக்குவார்.

பொதுப்பலன்
எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். செய்துவரும் தொழில் லாபம்தரும். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். உத்தியோகத்தில் கிடைக்க வேண்டிய உயர்வு கிடைக்கும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.

தொழில்
செய்துவரும் தொழிலில் அக்கறை அதிகரிக்கும். உங்கள் முயற்சிக்கும் முதலீட்டிற்கும் ஏற்ற ஆதாயம் கிடைக்கும். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சினிமா, தொலைக்காட்சி, வலைதளம், உணவகம், விடுதி, திருமண மண்டபம், டிராவல் ஏஜென்சி, ஆடை வணிகம், கால்நடை வளர்ப்பு, அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை, நிதி நிறுவனம், ஜுவல்லரி, வாகனத் தொழில்கள் முன்னேற்றம் அடையும். வழக்கறிஞர், நீதிபதி, ஆசிரியர், அமைச்சர்கள், ஆன்மீகப் பணியாளர்கள், வைத்தியர்கள், புரோகிதர்கள், கலைஞர்கள், பொறியாளர்கள் மதிப்பு உயரும்.

பணியாளர்கள்
தொழில் காரகனான சனிபகவான் தொழில்  ஸ்தானத்தை பார்ப்பதால் உழைப்பிற்கும் திறமைக்கும் உரிய மரியாதையும் சலுகைகளும் கிடைக்கும். அரசு பணியில் இருப்பவர்கள் சிபாரிசுகளுக்கு இடம் கொடுக்காமல் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுவது அவசியம். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வில் தடைகள் ஏற்பட்டாலும் உறுதியாக கிடைக்கும்.

பெண்கள்
குருவின் சஞ்சார நிலைகளும் பார்வைகளும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்று எதிர்பார்த்த ஒவ்வொன்றும் கிடைக்க ஆரம்பிக்கும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும்.  வாழ்க்கைத்துணையின் அன்பு அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். வேலைப்பார்க்கும் இடத்தில் உங்கள் திறமை மதிக்கப்படும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். சிலருக்கு உழைப்பின் காரணமாக உடல் நிலையில் சங்கடங்கள் ஏற்படும் என்பதால் இந்த நேரத்தில் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.

கல்வி
நான்மிட சனியால் படிப்பில் கவனம் சிதறும் என்றாலும், ராசிநாதன் குரு ஞானத்தை உண்டாக்குவார். ஆசிரியர்கள் ஆலோசனை உங்களைத் திறமையுடன் செயல்பட வைக்கும். பொதுத்தேர்வு, போட்டித்தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்வி கனவு நனவாகும்.

உடல்நிலை 
பரம்பரை நோய், தொற்று நோய், விபத்து என்று சங்கடப்பட்டு வந்தவர்கள் சரியான சிகிச்சையால் ஆரோக்கியமாக நடைபோடுவீர்கள். சுவாசக்கோளாறு, சிறுநீரக கோளாறு, ரகசிய நோய் என்று மனதிற்குள் சங்கடப்பட்டு வந்தவர்கள் நிலையிலும் மாற்றம் ஏற்படும். பயமுறுத்திய நோய்கள் மருத்துவத்தால் குணமாகும்.

குடும்பம் 
அர்த்தாஷ்டம சனிக்காலம் என்றாலும், ராசிநாதன் குருவின் சஞ்சாரங்களும் பார்வைகளும்  உங்களுக்கு முன்னேற்றத்தை உண்டாக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படுத்தும். வருமானமும் வசதி வாய்ப்புகளும் அதிகரிக்கும். தம்பதிகளுக்குள் இணக்கமான நிலை உருவாகும். புதிய இடம், வீடு, வாகனம், பொன், பொருள் என்று வாங்குவீர்கள். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். உங்கள் செல்வாக்கு உயரும். வீட்டில் மங்கல ஓசை ஒலிக்கும்.

பரிகாரம் தர்பாரண்யேஸ்வரரை வழிபட சங்கடங்கள் விலகும். நன்மைகள் நடக்கும்.


உத்திராடம்: எடுத்த வேலைகள் வெற்றியாகும்


ஆத்மகாரகனான சூரியன் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1ம் பாதமான தனுசுவில் பிறந்தவர்களுக்கு குரு ராசிநாதனாகவும், 2,3,4ம் பாதங்களான மகரத்தில் பிறந்தவர்களுக்கு சனி ராசிநாதனாகவும் உள்ளனர்.
உத்திராடம் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு இதுவரை சகாய ஸ்தானத்தில் சஞ்சரித்து சாதனைகள் புரிய வைத்த சனி பகவான் மார்ச் 6, 2026 முதல் சுக ஸ்தானத்தில் அர்த்தாஷ்டம சனியாக சஞ்சரிக்கப்போகிறார். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏழரைச்சனியாக நெருக்கடிகளை வழங்கி வந்தவர் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார். இதனால் 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பம், தொழில், உத்தியோகம் என்று அனைத்திலும் நெருக்கடிகளை ஏற்படுத்துவார். சங்கடங்களை அதிகரிப்பார். 2,3,4ம் பாதங்களில் பிறந்தவர்களை ஏழரை ஆண்டு காலம் அனுபவித்து வந்த போராட்ட நிலையில் இருந்து விடுவிப்பார். செல்வம் செல்வாக்கு அந்தஸ்து புகழ் என்று எல்லாவற்றையும் அடையக்கூடிய நிலையினை உருவாக்குவார்.
இந்த நேரத்தில் சுய ஜாதகம் பலமாக இருந்தாலும், நடக்கும் திசா புத்தி சாதகமாக இருந்தாலும் யோகப்பலன்கள் கூடுதலாகும்.

பலன்களில் மாற்றம்
சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்குச் செல்வதால் இக்காலத்தில், 1ம் பாதத்தினருக்கு சனி பகவானின் சஞ்சார நிலையினாலும் பார்வைகளினாலும் ஏற்படும் நெருக்கடிகள் நீங்கி நினைத்த வேலைகள் நடந்தேறும். எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். 2,3,4ம் பாதத்தினருக்கு சனியின் பார்வைகளால் ஏற்படும் பாதகங்கள் நீங்கும். விரயச்செலவுகள் கட்டுப்படும். தெய்வ அருளும் பெரியோர் துணையும் கிடைக்கும்.

ராகு - கேது சஞ்சாரம்  உத்திராடம் 1ம் பாதத்தினருக்கு நவ.13, 2026 வரை சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு, பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் எடுத்த வேலைகள் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். 2,3,4 ம் பாதத்தினருக்கு மீன சனிக்காலத்தில் ராகு கேது சஞ்சார நிலைகள் சாதகமாக இல்லை என்பதால் எடுக்கும் வேலைகள் அனைத்திலும் நிதானம் தேவை, புதிய முதலீட்டில் எச்சரிக்கை அவசியம்.

குரு சஞ்சாரம்
குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 -  ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சார நிலைகள் காரணமாக, 1ம் பாதத்தினருக்கு, மிதுனம், சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்யம், வீடு, வாகனம், பட்டம், பதவி என்ற கனவுகள் நனவாகும். கடகம், கன்னியில் சஞ்சரிக்கும் காலங்களில் குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வழக்கு விவகாரங்கள் வெற்றியாகும். 2,3,4ம் பாதத்தினருக்கு, கடகம், கன்னியில் சஞ்சரிக்கும் காலங்களில் யோகப்பலன்கள் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி, குடும்பத்தில் சுபநிகழ்ச்சி, வேலையில் முன்னேற்றம், பொருளாதார நிலையில் உயர்வு, பொதுவாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். மிதுனம், சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் விரயங்கள் கட்டுப்படும், குடும்பத்தில் நிம்மதி, பணப்புழக்கம் இருக்கும்.

பொதுப்பலன்
வாழ்வில் நிம்மதி உண்டாகும். நீண்டநாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். செய்துவரும் தொழில் முன்னேற்றமடையும். வேலைக்காக முயற்சித்து வருபவர்களுக்கு  தகுதியான வேலை கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். உத்தியோகத்தில் கிடைக்க வேண்டிய உயர்வு கிடைக்கும். புதிய சொத்து சேரும்.

தொழில்
தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். நஷ்டத்தில் இயங்கிய தொழில்களும் லாபமடையும்.
நிதி நிறுவனம், உதிரி பாகம் தயாரிப்பு மற்றும் விற்பனை, இயந்திரத் தொழிற்கூடம், வாகன விற்பனை, எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், தகவல் தொடர்பு, எக்ஸ்போர்ட், ஆன்லைன் வர்த்தகம், முன்னேற்றம் அடையும்.

பணியாளர்கள்
போராட்டமான நிலையை சந்தித்து வந்தவர்களுக்கு மாற்றமும் நிம்மதியும் ஏற்படும். தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருபவர்களுக்கு நிர்வாகத்தின் ஆதரவும் எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு வேலையில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்குவரும். எதிர்பார்த்த பதவி உயர்வு வரும்.

பெண்கள்
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்குவரும். கணவனுடன்  ஏற்பட்ட இடைவெளி விலகும். விவாகரத்து வரை சென்றவர்களும் மீண்டும் சேர்ந்து வாழும் நிலை வரும். திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும். வேலைக்காக முயற்சித்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த வேலைக் கிடைக்கும் நீண்ட நாட்களாக குழந்தை பாக்யம் இல்லாமல் இருந்தவர்கள் ஏக்கம் தீரும். பொன் பொருள் சேரும்.

கல்வி
படிப்பில் கூடுதல் கவனம் தேவை. ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்பது அவசியம். மேற்கல்வி கனவு நனவாகும். விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்கும்.

உடல்நிலை 
தொடர்ந்து மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வந்தவர்களுக்கு சிகிச்சை பலனளிக்கும். நோய் குணமாகும். ஆரோக்கியமாக செயல்படக்கூடிய நிலை உண்டாகும்.

குடும்பம் 
குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். தம்பதிகள் ஒருவரை ஒருவர் ஆலோசித்து முடிவெடுப்பீர்கள், சேமிப்பு உயரும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்கும் கனவு நனவாகும். பிள்ளைகள் மேற்கல்விக்கு செல்வர். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடைபெறும். வேண்டுதல்கள் நிறைவேறி ஆலயங்களுக்கு சென்று வருவீர்கள். உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும்.

பரிகாரம் :பகவதி அம்மனை வழிபட வேண்டுதல் நிறைவேறும். நன்மைகள் நடக்கும்.

 
மேலும் சனிப்பெயர்ச்சி பலன்! (6.3.2026 முதல் 24.4.2028 வரை) »
temple news
அசுவினி: செலவு அதிகரிக்கும்உங்கள் ராசிக்கு ஜீவனாதிபதியும், லாபாதிபதியுமான சனி பகவான் இதுவரை லாப ... மேலும்
 
temple news
கார்த்திகை: யோக காலம்ஆத்ம காரகனான சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1 ம் பாதமான ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்: உழைப்பு உயர்வுதரும்தைரிய வீரிய காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் ... மேலும்
 
temple news
புனர்பூசம்: மாற்றம் காத்திருக்குஞானக்காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் ... மேலும்
 
temple news
மகம்: விழிப்புணர்வு அவசியம்ஞான மோட்சக்காரகன் கேது, ஆத்மக்காரகன் சூரியன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar