கோவை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மார் 2026 12:03
கோவை ; மாசி மாதம் மூன்றாவது செவ்வாய்கிழமையை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் வள்ளி தேவசேனா சமேதராக சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.